தென் சூடானில் அமைதிக்காக பெண்கள் இயக்கம் தென் சூடானில் அமைதிக்காக பெண்கள் இயக்கம் 

தென் சூடான் குழந்தைகள் நிலையில் முன்னேற்றமில்லை

தென் சூடான் நாட்டில் மூன்றில் ஒரு கல்விக்கூடம் இயங்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் பெரும்பான்மையினருக்கு போர் மட்டுமே தெரிகிறது. ஆயுதக் குழுக்களின் பிடியிலும், பசியின் பிடியிலும் எண்ணற்ற சிறார்

பிரான்சிஸ் கிறிஸ்டோபர் - வத்திக்கான் செய்திகள்

தென் சூடான் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் நான்கிற்கு மூன்று பேர், போரைத் தவிர வேறு எது குறித்தும் தெரியாதவர்கள் என ஐ.நா.வின் யுனிசெஃப் நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.

தென் சூடானின் சுதந்திரத்திற்குப்பின், அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் 75 விழுக்காட்டினர், போரைத் தவிர வேறு எது குறித்தும் தெரியாதவர்கள் எனவும், 19 ஆயிரம் குழந்தைகள், ஆயுதக் குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும், 10 இலட்சம் குழந்தைகள், போதிய சத்துணவின்றி வாடுகின்றனர் எனவும் உரைக்கிறது, குழந்தைகளுக்கான அவசரகால நிதி நிறுவனம் யுனிசெஃப்.

தென் சூடான் நாட்டில் 33 விழுக்காட்டு கல்விக் கூடங்கள் இயங்காமல் இருப்பதாகவும், 20 இலட்சம் சிறார் பள்ளிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறும் யுனிசெஃபின் அறிக்கை, 10 இலட்சம் குழந்தைகள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.

ஆயுதக் கும்பல்களின் கைகளிலிருந்து இவ்வாண்டில் 800 சிறார்கள் மீட்கப்பட்ட போதிலும், இன்னும் 19,000 சிறார்கள் அயுதம் தாங்கியவர்களாகவும், சமையல் பணியாளர்களாகவும், செய்திகளை கொண்டு செல்பவர்களாகவும் ஆயுத கும்பல்களிடம் உள்ளதாக இந்த ஐநா. அமைப்பு கூறுகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2018, 16:44