தேடுதல்

லிபியக் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் மீட்புப்பணி லிபியக் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் மீட்புப்பணி 

கரையிறங்க முடியாமல் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்வோர்

பல நாள்களாக கடலில் தவிக்கும் ஏறத்தாழ 450 புலம்பெயர்வோரை ஏற்பது குறித்த சில ஐரோப்பிய நாடுகளின் தீர்மானம் பற்றி ஐ.நா. புலம்பெயர்வோர் நிறுவனம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

லிபியக் கடல்பகுதியிலிருந்து பயணத்தை மேற்கொண்டு, கரையிறங்க முடியாமல் மத்தியதரைக் கடலில் சிக்கியிருக்கும் புலம்பெயர்வோரை ஏற்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் எடுத்துள்ள தீர்மானம் குறித்து, ஐ.நா. புலம்பெயர்வோர் நிறுவனத் தலைவர் பிலிப்போ கிராந்தி அவர்கள், கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தாலிய கடற்கரைக்கு அருகில் தரையிறங்க அனுமதியின்றி இருந்த புலம்பெயர்ந்தோருக்கு, புகலிடம் அளிப்பதற்கு, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மால்ட்டா, இஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகள் எடுத்துள்ள தீர்மானம் குறித்துப் பேசிய, கிராந்தி அவர்கள், புலம்பெயர்ந்தோர், தாங்கள் சேரவேண்டிய நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

உலகளாவிய சட்டத்தின்படி, மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, நாடுகள் கடமையைக் கொண்டுள்ளன எனவும் நினைவுபடுத்தியுள்ளார், ஐ.நா. அதிகாரி கிராந்தி.

2018ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, 50,872 புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டில், இதே காலஅளவில், 1,09,746 பேர் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன(UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2018, 15:30