தேடுதல்

மண்டேலா வாழ்த்து அட்டையுடன் ஒரு சிறுமி மண்டேலா வாழ்த்து அட்டையுடன் ஒரு சிறுமி 

"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்" நூல் வெளியீடு

நெல்சன் மண்டேலா அவர்கள் பிறந்தநாளின் முதல் நூற்றாண்டையொட்டி, "நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்" என்று நூல் இப்புதனன்று வெளியானது

1918ம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி பிறந்த நெல்சன் மண்டேலா அவர்கள் பிறந்தநாளின் முதல் நூற்றாண்டு, ஜூலை 18 இப்புதனன்று சிறப்பிக்கப்படும் வேளையில், "நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்" என்று நூல் இப்புதனன்று வெளியானது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Liveright அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில், நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் எழுதி, இதுவரை வெளிவராத 255 கடிதங்கள் இடம்பெற்றுள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

1962ம் ஆண்டு தன் 44வது வயதில் தென் ஆப்ரிக்க அரசால் கைது செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள், அடுத்த 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் சிறையில் இருந்த 10,052 நாட்கள், சிறை அதிகாரிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, மற்றும், குறிப்பாக, தன் மனைவி, வின்னி மண்டேலா அவர்களுக்கும், தனது பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

Sahm Venter என்பவரால் மிக கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ள இக்கடிதங்கள் அடங்கிய நூலுக்கு, நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி, Zamaswazi Dlamini-Mandela அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா, நிறைவேறியிலிருந்து விடுதலையாகி, ஒரு குடியரசாக உருவாக காரணமாகவும், பின்னர் அந்நாட்டின் அரசுத்தலைவராகவும் விளங்கிய நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2018, 16:12