தேடுதல்

உக்ரைன் போர் பாதிப்புகள் உக்ரைன் போர் பாதிப்புகள் 

ஆயிரம் நாட்களாக இடம்பெறும் உக்ரைன் மீதான தாக்குதல்

உக்ரைன், இரஷ்யா மோதல்களில் எவ்வாறு போர் நிறுத்தத்திற்கும் நீதியான அமைதிக்கும் வழிவகுப்பது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரமிது

அந்த்ரேயா தொர்னியெல்லி – வத்திக்கான் செய்தித்துறை இயக்குனர்

(கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்)

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கிய இரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்ரமிப்பால் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தும் எண்ணற்றோர் ஊனமாகியும் உள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய நேரம் வந்துள்ளது என எழுதியுள்ளார் வத்திக்கான செய்திகள் துறையின் இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

பலரின் உயிரிழப்புக்கும் பல ஆயிரக்கணக்கானோரின் காயத்திற்கும் காரணமான இந்த ஆயிரம் நாட்கள் தாக்குதல் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது என உரைக்கும் தொர்னியெல்லி அவர்கள், ஏனைய போர்களைப் போலவே இதிலும் சுயநலக்காரணங்கள் உள்ளன எனவும், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் எவ்வித பாதிப்பையும் காணாத ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் சுயநல ஆசைகள் இங்கு காணப்படுகின்றன எனவும் கூறினார்.

ஆயிரம் நாட்களாக இடம்பெற்றுவரும் இந்த உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆக்ரமிப்புகளையும் தாக்குதல்களையும் எவ்வாறு முடிவுக்குக் கொணர்வது, எவ்வாறு போர் நிறுத்தத்திற்கும் நீதியான அமைதிக்கும் வழிவகுப்பது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரமிது என மேலும் கூறினார் வத்திக்கான் செய்திகள் துறை இயக்குனர்.   

அமைதி குறித்த திருத்தந்தையின் அழைப்புக்கு செவிமடுக்கப்பட்டிருந்தால் இத்தகைய, தடுக்க முடியாதது என எண்ணப்படும் மோதல்களின் குழிக்குள் வீழ்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார் தொர்னியெல்லி.

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் உயிரற்றவைபோல் காணப்படுகின்றபோதிலும், நம்மால் இந்த தாக்குதல்கள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்ற வத்திக்கான் செய்திகள் துறை தலைவர், அமைதி மற்றும் ஒத்துழைப்பிற்கான ஐரோப்பிய சமுதாயத்தின் பொறுப்புணர்வு இங்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2024, 15:20