பாலியல் கொடுமைக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாப்போம்.
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
பாலியல் கொடுமைக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிமடுப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவதற்கான ஒரு வாய்ப்பாகும் என சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீடத்துறை தலைவர், கர்தினால் Sean O'Malley தெரிவித்துள்ளார்,
வன்கொடுமைக்கு ஆளானவர்கள், பெரும்பாலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கடந்த காலத்தின் வலியுடன் மௌனத்தில் இருப்பார்கள், இது அவர்களின் தற்போதைய வாழ்வை கடினமாக்குவதுடன், எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது என்றார் கர்தினால் Sean O'Malley.
டிஜிட்டல் உலகம் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை முன்வைக்கிறது, இந்த தீமையை ஆழமாகப் புரிந்துகொள்வதே முக்கிய பணியாகும் என்ற கர்தினால் Sean O'Malley அவர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இணையதள வன்முறைக்கு தீர்வு காண திருப்பீட அவை தலத்திரு அவைகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது என்றும், சமூக ஊடகங்கள், விளையாட்டுக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒத்துழைப்பது அவசியம் என்று கூறியுள்ளார் கர்தினால் Sean O'Malley.
சட்ட விதிமுறைகளை ஊடுருவி, அன்றாட வாழ்வில் பாதுகாப்பான சூழலை உருவாக்க உறுதியான நடவடிக்கைகளுக்கும், தேவையான திறன்களை வளர்த்து, அதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு தேவையான விரிவான பயிற்சியில் கமிஷன் முதலீடு செய்யவும், மற்றும் Motu Proprio Vos Estis Lux Mundi பிற ஆவணங்களில் திருத்தந்தை வகுத்துள்ள விதிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கர்தினால் Sean O'Malley.
மிகவும் பலவீனமானவற்றைப் பாதுகாப்பதில் பல அலட்சிய நிகழ்வுகளால் திருஅவை பாதிக்கப்பட்டுள்ளது, இது, இந்த பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் மக்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய முதிர்ச்சியடைந்த விழிப்புணர்வுக்கு வழிவகுத்து, பயனுள்ள தீர்வுகளை முன்மொழிவதில் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்க திருச்சபை கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்