தேடுதல்

ஆயர் மாமன்றம் குறித்து பவுலோ ரூபினி ஆயர் மாமன்றம் குறித்து பவுலோ ரூபினி 

ஒருவருக்கொருவர் ஆழ்ந்து செவிமடுக்க அழைக்கும் திருஅவை

செவிமடுப்பதற்கு முன்னுரிமை, மௌனம் கடைபிடிக்கப்படல், ஒருவருக்கொருவர் அறிமுகம், தெளிவான உய்த்துணர்வு போன்றவை ஆயர் மாமன்ற முதல் கூட்டத்திற்கென முன்வைக்கப்பட்டன.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஆயர் மாமன்ற பணிக்குழுக்களின் செயல்முறைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்துள்ள சமூகத்தொடர்புத் துறையின்  தலைவர் பவுலோ ருபினி அவர்கள், ஆயர் மாமன்ற பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு தொகுதிக்குப் பிறகும் பத்திரிகையாளர் சந்திப்புகளை எதிர்பார்க்கலாமென்று தெரிவித்துள்ளார்.

வியாழன் பிற்பகல், வத்திக்கானில் செய்தியாளர்களிடம் பேசிய பவுலோ ருபினி அவர்கள், ஆயர் மாமன்றத்தின் 35 பணிக்குழுக்கள் அல்லது சர்குலி மைனர்கள் தங்கள் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், பணிக்குழுக்களின் செயல்முறைகள் பற்றியும், மேலும் அதன் உறுப்பினர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் போது முனைவர் ருபினி அவர்கள்,  ஆயர் மாமன்றத்தின் வழிமுறையின் பல்வேறு அம்சங்களாக பணிக்குழுக்களில் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும், தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், மற்றவர்களின் பகிர்விலிருந்து கற்றுக்கொண்டதை பிரதிபலிப்பதன் மூலமும் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் விளக்கியுள்ளார்.

திருதந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் கிழமை முதல் பொதுஅவைக் கூட்டத்தின் தனது உரையில், ஆயர் மாமன்றத்தின் ஆரம்ப கட்டப் பணிகளாக,  செவிமடுப்பதற்கு முன்னுரிமை, மௌனம் கடைபிடிக்கப்படல்(குறிப்பாக பொதுவில்), ஒருவருக்கொருவர் அறிமுகம், தெளிவான உய்த்துணர்வு மற்றும் இரகசியத்தன்மைக்கு மரியாதை ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார், என்ற முனைவர் ரூபினி அவர்கள்,  உலகளாவிய கத்தோலிக்க திருஅவை இந்த நான்கு வாரங்களில் வத்திக்கானில் ஒரு கால அவகாசம் எடுத்திருப்பதாகவும், திருத்தந்தை விருப்பப்படி அமைதியுடன், மரியாதையுடன் செவிமடுக்கும் இந்த நேரத்தில், போர், காலநிலை நெருக்கடிகளை நிறுத்த, ஒருவருக்கொருவர் செவிமடுப்பதன் வழி, மற்ற முனைகளிலும் உலகிற்கு உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்,

பணிக்குழுக்களின் செயல்முறை (சர்குலி மைனர்ஸ்)

தென்னாப்பிரிக்க ஆயர்கள் மாநாட்டின் தகவல் மற்றும் தொடர்பு ஆணையத்தின் செயலர் ஷீலா பைர்ஸுடன் இணைந்து, முனைவர் ருபினி அவர்கள், 35 பணிக்குழுக்களின் பணி, அவர்கள் அந்தந்த மொழி அட்டவணையில் கூடும் போது மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் மற்றும் முறைப்படி எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கக்காட்சியுடன் எடுத்துரைத்தார்.

இன்ஸ்ட்ருமென்டம் லெபோரிஸ் என்னும் பணி ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட மிகவும் முக்கியமான சிக்கல்கள், கூட்டத்தின் முதல் நாளில் இன்னும் விவாதங்களில் நுழையவில்லை எனவும், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட நான்கு நிமிடங்களில், முதல் படியாக, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், பின்னர், ஓருங்கிணைந்த பயணத்தின் பாதையின் முதல் கட்டத்தில், அது எப்படி உருவானது, சந்தித்த சிரமங்கள், உள்ளூர் தேவாலயத்திற்கும் உலகளாவிய தேவாலயத்திற்கும் இடையிலான உறவு ஆகியவை பகிரப்படும் எனவும் தெரிவித்தார் திருப்பீட சமூகத் தொடர்புத்துறைத் தலைவர்.

ஒவ்வொரு பணிக்குழுவிற்குமான வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகளைச் சேகரிக்கவும், குழுவிற்குள் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து பொது அவையில் முன்வைக்க ஓர் அறிக்கையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நபர், அறிக்கையை உருவாக்கி, ஒன்றுபடுதல்கள், வேறுபாடுகள், யோசனைகள் ஆகியவற்றைத் தொகுத்தளிப்பார் என்றும் முனைவர் ருபினி கூறினார்.

இதனுடன், பொது சபையில் யார் வேண்டுமானாலும் பேசலாம், மற்றும் ஆயர் செயலகத்திற்கு தங்கள் உரையை அனுப்பலாம் என்றும், ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த ஆன்மீக அனுபவம் உள்ளதாகவும், இது சுதந்திரமான சூழ்நிலையில் அமைதியான பகிர்வாகும், எனவே, அனுபவம் எல்லாவற்றிற்கும் மேலாக உறவு என்றும் அவர் விளக்கியுள்ளார்

படிப்படியாக செல்ல வேண்டிய அவசியம்

பத்திரிகையாளர்களாகிய நாம் முடிவை கற்பனை செய்து பார்ப்பது இயல்பானது, ஆனால் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு பதில் சொல்ல முடியாது, ஏனென்றால் நாங்கள் உண்மையில் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். திருதந்தை பிரான்சிஸ் எப்பொழுதும் கூறியது போல, ஆயர் மாமன்றம் ஒரு செயல்முறையாகும், மேலும் இது 2024 வரை தொடரும் ஒருங்கிணைந்த பயணம் பற்றியது, இதில் படிப்படியாக செல்ல முயற்சிப்போம், என்று சமூகத் தொடர்புத் துறையின் தலைவர் வலியுறுத்திள்ளார்,

இறுதி அறிக்கையின் தன்மை

அக்டோபர் இறுதியில் உருவாக்கப்படும் இறுதி அறிக்கையில், ஒன்றுபடுதல்கள் மற்றும் வேறுபாடுகள்  அடங்கும் என்றும்,  வருகையின் புள்ளியை அல்ல மாறாக நாம் செல்லும் பாதையை அது குறிக்கும், எனவே இது கடந்த ஆயர் மாமன்றங்களின் இறுதி ஆவணத்தை விட ஓர் இன்ஸ்ட்ரூமென்டம் லெபோரிஸ் போன்றது, என முனைவர் ரூபினி வலியுறுத்தினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2023, 15:41