மாறுபட்ட சிந்தனை உடையவர்களாக ஒன்றிணைந்து நடக்க..
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒருங்கிணைந்த பயணத்தின் இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதே திருஅவையின் பணி என்றும், நமது பார்வை கிறிஸ்துவை நோக்கித் திருப்பப்படும்போது, பழமையான முற்போக்கான சிந்தனையில் இருந்து மாறுபட்ட சிந்தனை உடையவர்களாக நாம் ஒன்றிணைந்து நடப்பதைக் காணமுடியும் என்றும் கூறினார் கர்தினால் Jean-Claude Hollerich.
அக்டோபர் 4 புதன்கிழமை மாலை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்க நிகழ்வில் இவ்வாறு கூறினார் கர்தினால் Jean-Claude Hollerich.
கடவுள் அன்பின் அடையாளமாக, காயமடைந்த மனிதகுலத்தை குணப்படுத்தும் மருந்தாக திருஅவை இருக்கட்டும் என்று வலியுறுத்திய கர்தினால் Hollerich அவர்கள், "நமது மொழிகளின் இலக்கணங்கள் எவ்வாறு வளர்ச்சியடைகின்றனவோ, அதே போல் ஒருங்கிணைந்த பயணத்தின் இலக்கணமும் காலப்போக்கில் மாறுகின்றன என்றும் கூறினார்.
திருமுழுக்கு அருளாடையாளம் வழியாக பெறப்பட்ட மனித மாண்பு, திருஅவையில் திருத்தூதர் பேதுருவின் வழிமுறைகள், ஒருங்கிணைந்த ஆயர் பேரவை, அருள்பணித்துவ வாழ்வு, உறுதி செய்யப்பட்ட பொதுப்பணிகள், நம்பிக்கையுள்ள மக்களின் வாழ்க்கை முறை, இவைகள் திருஅவை இலக்கணத்தில் ஒருபோதும் மாறாதவை என்று கூறிய கர்தினால் Hollerich அவர்கள், "நமது இந்தக் கத்தோலிக்க இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளுடன், தூயஆவியானவர் நமக்குத் தரும் புதிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.
"பொதுவான பகுத்தறிவிற்கான பணியில் தூயஆவியானவர் நம் மனதையும் இதயங்களையும் புதிய நிலைகளுக்குத் திறக்கிறார் என்று கூறிய கர்தினால் ஹோலேரிச் அவர்கள், "கிறிஸ்துவை நம்மிடையே இருக்கச் செய்யும்" தூய ஆவியானவரே ஆயர் மாமன்றத்தின் முக்கியமான ஆள் என்றும் எடுத்துரைத்தார்.
இறைமக்கள் பயணத்தின் மையத்தில் கிறிஸ்து
கிறிஸ்துவை மையமாக வைத்து வரலாற்றில் நடக்கும் இறைமக்களே திருஅவை என்று கூறிய கர்தினால் Hollerich அவர்கள், நமது பார்வை இறைவனின் பக்கம் திரும்பும் போது நமக்கு நேர்மாறான சிந்தனை உள்ளவர்கள், முற்போக்காளர்கள் மற்றும் பழமைவாதிகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது என்றும், அதைவிடுத்து கிறிஸ்துவுடன் இணைந்து அவருடைய திருஅவைக்குள் நடப்பதே முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
திருஅவைப் பணிகளின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறிய கர்தினால் Hollerich அவர்கள், "இந்த அறையில் இருந்து முழு உலகத்திற்கும் நாம் நமது பார்வையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், காலநிலை மாற்றம், போர்கள், சமூகத்திலும் திருஅவையிலும் ஏற்படும் பிரச்சனைகள், நுகர்வுக் கலாச்சாரம், உலகத்தை பாதிக்கும் தீமைகள் ஆகியவற்றில் "சமூகவியல் ஆய்வுகள் அவசியம்" என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்