தேடுதல்

இஸ்ரயேல் அரசுத்தூதர் மற்றும் திருப்பீடச் செயலர் இஸ்ரயேல் அரசுத்தூதர் மற்றும் திருப்பீடச் செயலர்  

இஸ்ரயேல் அரசுத்தூதர் மற்றும் திருப்பீடச் செயலர் சந்திப்பு

இஸ்ரயேல் அரசுத்தூதர் Raphael Schutz என்பவரை சந்தித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் தாக்குதலினால் ஏற்பட்ட துயரமான நிகழ்விற்கு ஆறுதலையும் ஆன்மிக நெருக்கத்தையும், ஒற்றுமையையும் வழங்கும் விதமாக இஸ்ரயேல் அரசுத்தூதர்  Raphael Schutz என்பவரை சந்தித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

அக்டோபர் 13 வெள்ளிக்கிழமை இஸ்ரயேல் அரசுத்தூதர் அலுவலகம் சென்று இஸ்ரயேல் அரசுத்தூதரைச் சந்தித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மோதலால் பாதிக்கப்பட்ட இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீன் மக்கள் குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து தன் ஆன்மிக நெருக்கத்தையும் உடன் இருப்பையும் தெரிவித்தார்.

அக்டோபர் 7 சனிக்கிழமை நடந்த தாக்குதலினால் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 600 ஆக உயர்ந்துள்ள நிலையில் மோதலினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த இருதரப்பினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2023, 11:52