தேடுதல்

உக்ரைன் சிறார் உக்ரைன் சிறார் 

சிறார் பிரச்சனைக்கு நேரம் ஒதுக்க ஆயர் மாமன்றத்திற்கு வேண்டுகோள்

திருஅவையில் உள்ள அனைத்து துறைகளும், பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்படுபவர்களை வரவேற்கும் இடங்களாக. நல்லிணக்கத்தின் இல்லங்களாக மாறுவதற்கு உழைக்க வேண்டும்

திமினா செலின் ராஜேந்திரன் - வத்திக்கான்

அனைத்து இடங்களிலும் சிறார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் வளங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், சிறார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆயர் மாமன்றம் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது திருப்பீடத்தின் சிறார் பாதுகாப்புக் கழகம்.

வருகின்ற அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வத்திக்கானில் தொடங்கவிருக்கும் ஆயர் மாமன்றத்திற்கு முன்னதாக திருத்தந்தையை சந்தித்த சிறார் பாதுகாப்புக்கான திருப்பிடக்கழகம் திருத்தந்தையுடனான சந்திப்பிற்கு பிறகு ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

திருஅவையில் உள்ள அனைத்து துறைகளும் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்படுபவர்களை வரவேற்கும் இடங்களாக நல்லிணக்கத்தின் இல்லங்களாக மாறுவதற்கு உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அக்கழகமானது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டும் அல்லாமல் மாமன்றம் முழுவதும் இந்த நீண்ட கால தாமதமான இலக்குகளை கருத்தில் கொண்டு செயல்படும்படி வலியுறுத்தியுள்ளது.

சிறார் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு எதிரான பாலியல் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில், முறைகேடுகள் செய்தவர்களையும், அதனை மறைப்பவர்களையும் தண்டிக்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க சட்டம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிறார் பாதுகாப்பிற்கான முதல் உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள், முறைகேடுகளுக்குத் தீர்வு காண உரோமில் உள்ள அனைத்து ஆயர்களையும் ஒன்று திரட்டினார்.

அண்மையில் சிறார் பாதுகாப்புக்கான இலத்தீன் அமெரிக்க ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தின் (CEPROME) குழு பிரதிநிதிகளோடு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ். சிறார் பாலியல் முறைகேடுகளை ஒழிப்பதில் திருஅவையின் முன்னேற்றத்தையும் எடுத்துரைத்தார். மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் புதிய கர்தினால்கள் மற்றும் ஆயர் மாமன்றத்தின் 16 வது பொதுச் சபையை உருவாக்குவதற்கான இந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பிரச்சனைகளைப் விவாதிக்க நடவடிக்கைக்கான அழைப்பு விடுக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2023, 15:09