தேடுதல்

கர்தினால் மத்தேயோ சுப்பி கர்தினால் மத்தேயோ சுப்பி 

சீனாவில் பேச்சுவார்த்தை நடத்திய திருத்தந்தையின் பிரதிநிதி

உக்ரைன் அமைதி தொடர்பாக சீன வெளியுறவுத் துறையின் சிறப்பு அதிகாரி Li Hui அவர்களுடன் கர்தினால் சுப்பி அவர்கள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற நோக்கத்துடன் திருத்தந்தையின் பிரதிநிதியாக பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுவரும் கர்தினால் மத்தேயோ சுப்பி அவர்கள், சீன வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சீன வெளியுறவுத் துறையின் ஐரோப்பிய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி Li Hui அவர்களுடன் கர்தினால் சுப்பி அவர்கள் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுவார்த்தைகள் மனம் திறந்ததாகவும், சுமுகமானதாகவும் இருந்ததாக திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், உக்ரைனில் இடம்பெறும் போர் மற்றும் அதன் தீய விளைவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று, அமைதிக்கு இட்டுச்செல்லும் பாதை காண்டுபிக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக திருப்பீடத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

உக்ரைன் நாட்டில் நீதியான தீர்வு காணப்படவேண்டும் என்ற நோக்கத்தில், ஏற்கனவே ஜூன் 5 மற்றும் 6 தேதிகளில் உக்ரைன் தலைநகரிலும், அதே மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் இரஷ்ய தலைநகரிலும், ஜூலை 17 முதல் 19 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகரிலும் திருத்தந்தையின் பிரதிநிதியாக பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் சுப்பி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2023, 12:54