தலத்திருஅவையில் பெண்களின் பங்கேற்பு காலத்தின் அடையாளம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் பெண்களின் தலைமைத்துவமும் பங்கேற்பும் காலத்தின் அடையாளம் என்றும், திருஅவையின் முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர்களோடு பெண்களையும் ஈடுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி Nathalie Becquart.
அண்மையில் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க ஆய்வு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ கருத்துரையில் பங்கேற்று அதுபற்றி, தேசிய கத்தோலிக்க பெண்கள் அமைப்பிற்கு வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகத்தின் நேரடி பொதுச்செயலர் அருள்சகோதரி Nathalie Becquart.
கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பயணம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி எடுத்துரைத்த அருள்சகோதரி நத்தாலியே அவர்கள், அனைத்து நாடுகள், மறைமாவட்டங்கள், ஆயர் மாநாடுகள் என எல்லா நிலையிலிருந்து வந்த முக்கிய தலைப்பு பெண்களின் பங்கேற்பு என்றும் எடுத்துரைத்துள்ளார்.
காலத்தின் அடையாளமாக திருஅவையில் பெண்களின் பங்கேற்பு கருதப்படுகின்றது என்றும், அதிகமான பெண்கள் பங்கேற்றல், முடிவெடுக்கும் பொறுப்புக்களில் பெண்களின் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கான ஒரு பொதுவான அழைப்பு என்றும் கூறியுள்ளார். அருள்சகோதரி நத்தாலியே.
கத்தோலிக்க திருஅவை, மேற்கத்திய கிறிஸ்தவ மரபுகளின் புரிதல் மற்றும் அனுபவத்தில் இருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டமானது ஒன்றிணைந்த பயணப்பாதையில் இணைந்து கற்றலை வலியுறுத்துகின்றது என்றும், ஏறக்குறைய 140 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கின் இறுதியில் நடைபெற்ற சிறிய-குழு கலந்துரையாடலில் செயல்முறைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்றும் எடுத்துரைத்தார் அருள்சகோதரி நத்தாலியே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்