தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றம் (கோப்புப்படம்) உலக ஆயர்கள் மாமன்றம் (கோப்புப்படம்)  (Vatican Media)

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆவணப் பணிகள் தொடக்கம்

இந்த நிபுணர்கள் அனைவரும் கண்டங்கள் அளவில் ஆயர்கள் மாமன்றத்திற்கான ஏழு இறுதி ஆவணங்களை வடிவமைப்பதில் நேரத்தை செலவிடுவார்கள்: கர்தினால் கிரேக்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆவணப் பணிகள் (Instrumentum Laboris) தொடங்கியுள்ளதாக வத்திக்கான் செய்தித் துறையிடம் கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக்.

ஆயர் மாமன்றத் தலைமைச் செயலகம் ஏப்ரல் 12 முதல், அடுத்த வாரத்தில், 2021-2024 சினோடல் செயல்பாட்டின் பல்வேறு நிலைகளில் பங்கேற்க ஐந்து கண்டங்களைச் சேர்ந்த நிபுணர்கள் குழு வத்திக்கானில் உள்ள தலைமைச் செயலகத்தில் கூடுகிறது என்று,  ஏப்ரல் 12, இப்புதனன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் கர்தினால் கிரேக்.

மேலும் இவர்கள் அனைவரும் கண்டங்கள் அளவில் உலக ஆயர்கள்  மாமன்றத்திற்கான ஏழு இறுதி ஆவணங்களை வடிவமைப்பதில் நேரத்தை செலவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிரேக்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 4 முதல் 29 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்விற்கான ஆவணப் பணிகளைத் தொடங்குவதே இவர்களின் நோக்கம் என்றும், இந்த அமர்வு ஒரு சிறிய இறைவேண்டலுடன் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் கிரேக்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஏப்ரல் 2023, 14:35