மனித முன்னேற்றத் திருப்பீட அவைக்குப் புதிய துணைச் செயலர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பேரருள்தந்தை Anthony Onyemuche Ekpo அவர்களை ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புதிய துணைச் செயலாளராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இவ்வவையின் புதிய துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்தந்தை Ekpo அவர்கள் இப்போதுவரை திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கான பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
பேரருள்தந்தை Ekpo அவர்கள், 1981-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் நைஜீரியாவின் உமுடிகேயில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள் Umuahia மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்,
2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் (Systematic Theology) முனைவர் பட்டம் பெற்ற பிறகு, 2021-இல் கிரிகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டபடிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 2023-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனி இல்ல ஆன்மிக வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இக்போ மற்றும் ஆங்கிலம் தவிர, இத்தாலிய மற்றும் பிரஞ்சு மொழிகளையும் இவர் கற்றறிந்தவர்.
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி முதல், திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் பேரருள்தந்தை Ekpo
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்