தேடுதல்

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் கர்தினால்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் கர்தினால்கள் 

சிறார் பாதுகாப்பிற்கான ஒப்பந்தத்தில் திருப்பீடத்துறைகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது கொள்கை விளக்கமான Praedicate Evangelium என்பதை அடியொற்றி இந்த ஒப்பந்தமானது பின்பற்றப்படும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

குறிப்பிட்ட தலத்திருஅவைகளில் மிகவும் பலவீனமானவர்களை முறைகேடுகளுக்கு ஆளாக்குவதைத் தடுக்கவும், இணைந்து செயல்படவும் வலியுறுத்தி திருப்பீடத்தின் சிறார் பாதுகாப்புப் பேராயம், புதிய நற்செய்தி அறிவிப்புப் பேராயம், நற்செய்தி அறிவிப்புப் பேராயம் ஆகியவை இணைந்து சிறார் பாதுகாப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமை, கர்தினால் Seán O’Malley, கர்தினால் Luis Antonio Tagle ஆகியோர்

திருப்பீடப் பேரவை அலுவலகங்களில் ஒன்றாகச் சந்தித்து இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் இந்த ஒப்பந்தம் பற்றிய தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது கொள்கை விளக்கமான Praedicate Evangelium என்பதை அடியொற்றி இந்த ஒப்பந்தமானது பின்பற்றப்படும் என்றும், மனித உயிர்கள் மற்றும் சமூகங்கள் மீது நடத்தப்படும், முறைகேடுகள், தவறான செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதான தாக்கத்தை நன்கு புரிந்துகொள்வதில் திருப்பீடத்தின் பேராயங்கள், ஆயர் மாமன்றத்திற்கு உதவ முடியும் என்றும் கர்தினால் O’Malley கூறினார்.  

சிறார் பாதுகாப்பிற்கான மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன், பாதிக்கப்பட்டவர்கள், தலத்திரு அவைகள் மற்றும் ஆயர்களுக்குப் பணியாற்றுவதன் வழியாகப் பாதுகாக்கும் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதையும், உறுதியான கட்டமைப்பு மாற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்றும் கூறினார். கர்தினால் O’Malley, 

மறைமாவட்டங்களுடன் இணைந்து திட்டங்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேய்ப்புப்பணிப் பராமரிப்பைப் பெற உதவுவதற்காக, செயலாற்றுவோம் என்றும், நீதித்துறை நடைமுறைகளைப் பற்றிய வழிகாட்டுதல்கள் மட்டுமன்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உறுதியான பாதுகாப்பு மற்றும் தடுப்புக்கான ஓர் அங்கமாகவும் செயல்படுவோம் என்றும் கூறினார் கர்தினால் O’Malley.    

இதன் வழியாகத் தலத்திருஅவைகள், ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்கள், சிறார் மற்றும் இளையோர்க்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று கூறிய கர்தினால் O’Malley அவர்கள், சிறார் பாதுக்காப்பிற்கான இம்முயற்சிகளில் உள்ளூர் தலத்திருஅவைகள் புளிக்காரமாக இருந்து செயல்படும் என்றும், மிகவும் தேவையான இப்பணி பரந்த சமுதாயத்திற்குத் திருஅவையின் பங்களிப்பு என்றும் கூறினார்.

தலத்திருஅவை, முறைகேடுகளைக் கையாள்வது, சிறார்களும் பலவீனமானவர்களும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வது பற்றிய கவலைகளைக் கையாள்வதில் ஒரு மேல்நோக்கிய போரை எதிர்கொண்டதாகக் கூறிய கர்தினால் O’Malley நற்செய்தி, அறிவிப்புப் பேராயத்துடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் எடுத்துரைத்தார்.

சக்திவாய்ந்த மற்றும் மிகவும் பயனுள்ள ஒப்பந்தம் வழியாக இளையோரை செபத்தில் ஈடுபடுத்துவது, சமூக ஊடகங்களைக் கையாள்வதில்  பேராயத்தின் உதவியுடன் இதைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக எடுத்துரைத்த கர்தினால் O’Malley, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் பெரும்பாலான முறைகேடுகள் இல்லங்களில் நிகழ்கின்றன என்றும் சில சமயங்களில் வறுமையே இதற்குக் காரணம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2023, 13:25