தேடுதல்

புதிய கர்தினால்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் புதிய கர்தினால்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

போர் மற்றும் அமைதி குறித்து விவாதித்த C9 கர்தினால்கள் அவை

உலகின் பல பகுதிகள் நிகழ்ந்து வரும் போர் மற்றும் மோதல் சூழ்நிலைகள் குறித்தும் ஒட்டுமொத்த திருஅவையிலும் அமைதியைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் குறித்தும் கர்தினால்கள் அவைக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போர்கள், மற்றும், ஒட்டுமொத்தத் திருஅவையிலும் ஒன்றுபட்ட அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியின் அவசியம் ஆகியவை இந்த வாரம் கார்த்தினால்கள் அவையில் விவாதிக்கப்பட்ட விடயங்களில் அடங்கும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாகம் தெரிவித்துள்ளது.

திருத்தந்தைக்குத் திருஅவை நிர்வாகத்தில் உதவும் C-9 என்னும் கர்தினால்கள் அவையின் இவ்வாண்டு முதல் கூட்டம் ஏப்ரல் 24, திங்களன்று திருத்தந்தையின் தலைமையில் வத்திக்கானில் நடைபெற்ற வேளை,  அதில் போர்கள் மற்றும் அமைதியை கட்டியெழுப்புவதற்கான தேவை பற்றி விவாதிக்கப்பட்டதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 24 மற்றும் 25 தேதிகளில் நடந்த கர்தினால்கள் அவையின் இந்தக் கூட்டங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொண்டார் என்றும், சபையின் அனைத்து உறுப்பினர்களும் அதன் செயலாளரும் கலந்துகொண்டதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் போர் மற்றும் மோதல் சூழ்நிலைகள் குறித்தும், ஒட்டுமொத்தத் திருஅவையிலும் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

கர்தினால்களின் எல்லைக்குட்பட்ட பணித்தளங்களிலுள்ள சமூக-அரசியல், மற்றும், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த தலைப்புகளிலும் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தாகவும் அவ்வறிக்கையில்  கூறப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2023, 14:38