தேடுதல்

குடியேற்றதாரருடன் திருத்தந்தை பிரான்சிஸ். (கோப்புப்படம் 2016) குடியேற்றதாரருடன் திருத்தந்தை பிரான்சிஸ். (கோப்புப்படம் 2016)   (ANSA)

உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பு

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு உலகில் சிறப்பிக்கப்படவிருக்கும் 109வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென மையக்கருத்தை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென, “குடிபெயர்வதா, தொடர்ந்து தங்கியிருப்பதா என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்“ என்பதை இவ்வாண்டு கொண்டாட்டங்களுக்கான தலைப்பாக அறிவித்துள்ளது மனித ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திருப்பீட அமைப்பு.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென்று, திருப்பீடத்தால், “குடிபெயர்வதா, தொடர்ந்து தங்கியிருப்பதா என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்“, என்பது தேர்வுச் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, “குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து வருங்காலத்தைக் கட்டியெழுப்புதல்“, என்பது தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2023, 13:32