தேடுதல்

ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்கத் திருப்பலி 2021 (கோப்புப்படம்) ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்கத் திருப்பலி 2021 (கோப்புப்படம்) 

உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புக் குழுவின் 7 உறுப்பினர்கள்

ஆயர்கள் மாமன்றத்திற்கான இறைவேண்டல் வழிபாட்டில் பொதுநிலையினர், அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியரின் பங்கேற்பு இருக்க வேண்டும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2023, இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புக் குழுவில் ஒரு அருள்சகோதரி உட்பட  ஏழு உறுப்பினர்களை நியமித்துள்ளார் அம்மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக்

இயேசுசபை அருள்பணியாளர் Giacomo Costa, பேராயர் Timothy John Costelloe, ஆயர் Daniel E, ஆயர் Lucio Andrice Muandula, அருள்பணியாளர் Dario Vitali  மற்றும் பேரருள்திரு Tomasz Trafny மற்றும் கர்தினால் Jean-Claude Hollerich ஆகியோர் அந்த ஏழு உறுப்பினர்கள் ஆவர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே 31 புதன்கிழமையன்று, 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாராகும் வகையில் உலகளாவிய ‘மரியன்னை இறைவேண்டல் நாள்’ அந்தந்த நாடுகளின் ஏதாவது ஒரு மரியன்னை திருத்தலத்தில் நடத்தப்படும்  என்றும் இவ்வாயர் மாமன்றச் செயலகத்தால் முன்மொழியப்பட்டது.

ஆயர்கள் மாமன்றச் செயல்முறையின் முக்கியத்துவத்தை இறைமக்களுக்கு உணர்த்துவதும், இறைவேண்டலில் ஈடுபட நம்பிக்கையாளர்களை வலியுறுத்துவதும் மற்றும் திருஅவையின் முழு Synodal செயல்முறையையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் வைப்பதும் இதன் நோக்கமாக எடுத்துக்காட்டப்பட்டது.

எந்த மரியன்னையின் திருத்தலத்தில் இவ்விறைவேண்டலை நடத்துவது என்பதை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஆயர்பேரவை முடிவு செய்யும் என்றும், இந்த இறைவேண்டல் வழிபாட்டில் பொதுநிலையினர், அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியரின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்றும் ஆயர் மாமன்றச் செயலகத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2023, 14:11