அமைதிக்கான நம்பிக்கையை வழங்கும் வழிகளைக் கண்டறிதல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதி, நீதி மற்றும் பொது நலனுக்காக ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவது என்பது, ஒவ்வொரு நபரின் மாண்பு மற்றும் உரிமைகளை மதிக்கிறது என்றும், தனிநபர்களிடையே மட்டுமன்றி, எல்லா மக்களிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்து, அமைதிக்கான நம்பிக்கையை வளர்க்கும் வழிகளைக் கண்டறிய முயல் வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் Francesca Di Giovanni.
திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலராக, பணியாற்றி ஓய்வு பெறும், Francesca Di Giovanni வத்திக்கான் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் உரையாடலைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு, திருப்பீடத்தின் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தினார்.
மார்ச் 24 அன்று தனது எழுபது வயதை நிறைவு செய்யும் Francesca Di Giovanni. திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலராக, பதவி வகித்த முதல் பெண்மணி ஆவார். 1993 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தனது முப்பது ஆண்டு பணிவாழ்வில் மூன்று திருத்தந்தையர்களுக்குப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.
தனது தனிப்பட்ட அனுபவம், நாடுகளிடையே அமைதிக்கான காரணத்திற்காக திருப்பீடம் வழங்கும் பங்களிப்பு, கால நிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள், அமைதிக்கான பெண்களின் பங்கு போன்றவை பற்றிய பல கேள்விகளுக்கு இந்நேர்காணலில் பதிலளித்துள்ளார் Francesca Di Giovanni.
புதிய முன்னோக்குகள் மீதான ஆர்வமானது நம்பிக்கையின் பாதைகள் மற்றும் சாத்தியமான ஒன்றிணைந்த செயல்பாடுகளைக் கண்டறியும் விருப்பத்துடன் திறக்கப்பட்டது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, தீமை மேலோங்கியதாகத் தோன்றும் காலங்களிலும், இருண்ட மற்றும் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளில் கூட, மனிதகுலத்தை நோக்கிய பயணத்தில் கடவுளின் பாதுகாப்பு துணையாக இருக்கும் என்றும் கூறினார் Di Giovanni.
உக்ரைனில் நடைபெறும் போர், மோதல்கள் நீண்டகாலமாக பலதரப்பு அமைப்பை பாதித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இத்தகைய சவால்களுக்கு போதுமான பதிலளிப்பதற்கு ஆழ்ந்த மறுபரிசீலனை தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்த Di Giovanni, உலகத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கூட்டு நடவடிக்கை மிகவும் தேவைப்படுகின்றது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அமைதி, நீதி மற்றும் பொது நலனுக்காக ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புதல், ஒவ்வொரு நபரின் மாண்பு மற்றும் உரிமைகளை மதிக்கிறது என்றும், தனிநபர்களிடையே மட்டுமன்றி, எல்லா மக்களிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்து, நீதி, உண்மை மற்றும் நன்மையின் மதிப்புகளில் கவனம் செலுத்துகிறது என்றும் எடுத்துரைத்தார் Di Giovanni.
இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தம், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான 2018 உலகளாவிய ஒப்பந்தம், கல்வி, கலாச்சாரம், பல்லுயிர் போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள், திருத்தங்கள் போன்றவற்றில் திருத்தந்தை நமக்கு நினைவூட்டுவது போல், பின்னடைவை அனுமதிக்காது மனிதநேயத்துடன் செயல்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட Di Giovanni, நேர்மையான உரையாடல், சிறியவற்றில் தொடங்கி, பெரிதாக உருமாற நம்பிக்கையின் ஒளியை நம்மில் மெதுவாக எழுப்புகிறது என்றும் எடுத்துரைத்தார்.
அமைதியை வலியுறுத்துவதில், கற்பிப்பதில் பெண்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்று கூறிய Di Giovanni, இது ஆண் பெண் பாகுபாட்டை விலக்குவது அல்ல, மாறாக பொதுவான பிரதிபலிப்பில் வெளிப்படும் வெவ்வேறு சிந்தனையை ஏற்றுக்கொள்வதை ஒருங்கிணைப்பதாகும் என்றும் கூறினார்.
திருப்பீடச் செயலரின் அலுவலகத்தின் ஓர் அங்கமாக இயங்கும் திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலராக, முனைவர் பிரான்செஸ்கா தி ஜியோவான்னி (Francesca Di Giovanni) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2020 ஆம் ஆண்டு சனவரி 15 நியமிக்கப்பட்டார்.
1953ம் ஆண்டு, இத்தாலியின் பலெர்மோ எனுமிடத்தில் பிறந்த பிரான்செஸ்கா அவர்கள், சட்டப்படிப்பை நிறைவு செய்து, Focolare இயக்கத்தில் பணியாற்றியபின், 1993ம் ஆண்டு முதல், கடந்த 27 ஆண்டுகளாக, திருப்பீடச் செயலரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்