ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி 

மாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த பயணத்திற்கான பாதை

உலகத்தை மேம்படுத்தும் திசையில் செபம் மற்றும் தவத்தை வாழ வேண்டும்.– கர்தினால் செர்னி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தவக்காலம் மாற்றத்திற்கான பாதை மற்றும் ஒருங்கிணைந்த பயணத்திற்கான பாதை என்றும், திருத்தூதர்கள் மூவரின் உடன் இருப்பானது ஒற்றுமை, அழகு, பிணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார் கர்தினால் மைக்கிள் செர்னி.

2023 ஆம் ஆண்டு தவக்காலத்திற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியின் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி

தவக்காலத்திற்கான இந்த ஆண்டு செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தவக்காலமும் அழகும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்றும், தாபோர் மலையில் கிறிஸ்துவின் உருமாற்ற நிகழ்வில், அழகு என்பது மாற்றம், தன்னை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சி, மனமாற்றம் போன்றவற்றிலிருந்து வருகிறது என்பதை இறைவன் அறிவுறுத்துகிறார் என்றும்,

திருத்தூதர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரின் உடன்இருப்பானது, ஒற்றுமை,  பிணைப்பு, அழகு,  அனுபவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செர்னி.

தொண்டு மற்றும் மனித வளர்ச்சி

உலகத்தை மேம்படுத்தும் திசையில் செபம் மற்றும் தவத்தை வாழ வேண்டும் என்றும், "மிகவும் செங்குத்தான மலையேறுதல்" போன்ற வாழ்க்கையை அனுபவிப்பவர்களின் பயணம் கடினமாவது நமது அலட்சியத்தால் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் செர்னி.

உலகில் தொண்டு மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான அழைப்பு. மற்றும் திருஅவையின் பணிகளை நினைவு கூர்ந்த கர்தினால் செர்னி அவர்கள், மனித வளர்ச்சியைத் தடுக்கும் தடைகள், தொற்றுநோயைத் தொடர்ந்து வந்த வறுமை நிலைமை, உக்ரேன்  போர் ஆகியவற்றைக் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2023, 14:37