தேடுதல்

கர்தினால் George Pell கர்தினால் George Pell  

முன்னேற்றத்தின் வழிகளைக் காட்டிவர் கர்தினால் George Pell

"கர்தினால் George Pell ஒரு சிறந்த மனிதர், நாம் அவருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறோம்" : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்ககம் -வத்திக்கான்

81 வயது நிரம்பிய ஆஸ்திரேலிய கர்தினால் George Pell இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகளால் ஜனவரி 19, இச்செவ்வாயன்று இரவு 9 மணியளவில் உரோமையில் இறைபதம் சேர்ந்தார்.

1941-ஆம் ஆண்டு விக்டோரியாவிலுள்ள Ballarat-இல் பிறந்தார். முதலில் சிட்னியின் பேராயராகவும், அதன் பின்னர் மெல்போர்னின் பேராயராகவும் பணியாற்றிய பிறகு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியன்று சீர்திருத்தத் திட்டத்தைப் படிக்கவும், திருஅவையை நிர்வகிப்பதில் அவருக்கு உதவவும் கர்தினால்கள் அவையில் சேர அழைக்கப்பட்டார். 2014-ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று, அவர் பொருளாதாரத்திற்கான புதிதாக உருவாக்கப்பட்டச் செயலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ச்சியான நிதி சீர்திருத்தங்களைத் தொடங்கினார். டிசம்பர் 2018 மற்றும் பிப்ரவரி 2019-இல் இந்த இரண்டு பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகினார்.

ஆஸ்திரேலியாவில் அவர்மீது சுமத்தப்பட்ட முறைகேடு சம்மந்தமான அவரது விசாரணை மற்றும் சிறைவாழ்வைத் தொடர்ந்து உரோமைக்குத் திரும்பிய பின்னர்,  2021-ஆண்டு, அக்டோபர் 12-ஆம் தேதியன்று, வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தையால் வரவேற்கப்பட்டார். அந்நிகழ்வின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Pell அவர்களின் சான்று வாழ்விற்கு நன்றி கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2023, 13:45