ஜெனீவா பன்னாட்டு மற்றும் ஐ நா அமைப்பின் 20 வது ஆண்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
பாரம்பரிய வளங்களும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் கொடிய ஆயுதங்களை உருவாக்க ஒதுக்கப்படுவதற்கு பதிலாக, திருத்தந்தை வலியுறுத்துவதற்கிணங்க உரையாடலை வளர்ப்பதற்கும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றுக் கூறியுள்ளார் பேராயர் Fortunatus Nwachukwu.
நவம்பர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற 20வது பன்னாட்டு மற்றும் ஐக்கிய நாடுகளமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறுக் கூறியுள்ளார், அவ்வமைப்பிற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் பொர்துனாதுஸ் நவ்சுக்.
கண்ணிவெடிகளை அகற்றுதல், அதன் இருப்புக்களை அழித்தல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவை சட்டப்பூர்வ கடமைகள் மட்டுமல்ல, அவற்றை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்கான வலியுறுத்தல் என்று சுட்டிக்காட்டிய பேராயர் நவ்சுக், அவைகள் நம் மனசாட்சியின் முன் உறுதியாக இருக்க வேண்டிய நெறிமுறை கட்டாயங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கண்ணிவெடிகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட பலரின் மனிதமாண்பை நாம் மதிக்க வேண்டும் எனவும், தூக்கி எறியும் கலாச்சாரம், பூமிக்கோளத்தை அலட்சியம் செய்தல் என்று திருத்தந்தை எச்சரிக்கும் உலகில் செல்லாதவாறு இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் நவ்சுக்.
கண்ணிவெடிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிறுத்துமாறும் திருப்பீடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்பதை எடுத்துரைத்த பேராயர் நவ்சுக், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தலத்திரு அவைகளின் நிறுவனங்கள் உட்பட, திருப்பீடமும் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது என்றும், தொடர்ந்து உதவி வரும் பிற நாடுகளுக்கும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
குடும்பங்களின் ஒற்றுமை, மற்றும் உறுதியான வெளிப்பாடு, நிதி மற்றும் மனித வளங்களை தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதன் அடிப்படையாக அமைகின்றது எனவும், ஒத்துழைப்பும் ஒற்றுமையும் கொண்டு, பல தன்னார்வலர்கள் மற்றும் அமைதியை ஏற்படுத்துபவர்கள் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆன்மீக உதவி மற்றும் பாதுகாப்புத்துணை கவனிக்கப்பட வேண்டிய மிகமுக்கியமான பகுதி என்பதையும் வலியுறுத்தினார் பேராயர் நவ்சுக்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்