படைப்பின் அழகு இரண்டாவது தேசிய கூட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
படைப்பின் அழகு என்ற தலைப்பில் இரண்டாவது தேசிய கூட்டமானது இத்தாலியில் உள்ள உம்ப்ரியா மாவட்டத்தின் Montefalcoவில் வெள்ளிக்கிழமையும், பின்னர் Assisiயில் சனிக்கிழமையும் என நடைபெற்றுவரும் வேளையில், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் சனிக்கிழமை நிகழ்வில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25 வெள்ளிக்கிழமை மற்றும் 26 சனிக்கிழமை ஆகிய நாட்களில் படைப்பின் அழகு என்ற தலைப்பில் மோந்தேஃபால்கோ மற்றும் அசிசியில் நடைபெற்று வரும் இரண்டாவது தேசிய கூட்டமானது, பூமிக்கோளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சியைக் கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்று வருகின்றது.
இதில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் எனவும், அனுபவங்கள் மற்றும் செயல்திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வானது, திருத்தந்தையின் Laudato si' இல் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் நடத்தப்படுகின்றது எனவும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
அசிசி, மோந்தேஃபால்கோ ஆயர், அரசுப்பணித் தலைவர்கள், மற்றும் பலர் பங்கேற்கும் இக்கூட்டமானது, சகோதரி இயற்கை எனப்படும் Sorella Natura, மற்றும், படைப்பின் நண்பர்கள் என்னும் Amici del Creato அமைப்புக்களால் நடத்தப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்