தேடுதல்

திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் . திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் .  

சிறார் அணுகுமுறையை ஆதரிக்கும் திருப்பீடம்

கத்தோலிக்க திருஅவை 9,230 ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் 10,441 பாலர் பள்ளிகள் வழியாக சிறாரைக் காத்து வருகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒவ்வொரு சிறாருக்கும் உரிமையுள்ள கல்வியுடன் கூடிய கவனிப்பின் செயல்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒரு முழுமையான சிறார் அணுகுமுறையைத் திருப்பீடம் ஆதரிக்கின்றது என கூறியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் .

நவம்பர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தானில், சிறாரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உலக சிறார் கல்வி மற்றும் சிறார் பருவம் பற்றி WCECCE அமைப்பினர் நடத்தியக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் .

"சிறாரை கைவிட்டுவிடாதீர்கள்" என்று அழைப்புவிடுக்கும் கத்தோலிக்க திருஅவை 9,230 ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் 10,441 பாலர் பள்ளிகள் வழியாக அவர்களைக் காத்து வருகின்றது, எனவும்,  ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் அச்சிறாருக்கான பணிகளைத் துணிவுடன் செய்து வருகின்றார்கள் எனவும் கூறியுள்ளார் பேராயர் காலகர். 

பெண்கல்வி மேம்பாடு, தெருவோரச் சிறார், குறைபாடுள்ள சிறார், வறுமையில் வாடும் சிறார் போன்றோருக்கு பணி செய்து அவர்கள் மாண்பை மீட்டெடுத்தல், உடல் மற்றும் உளவியல் ஒருமைப்பாட்டிற்கான கலாச்சாரத்தை வளர்த்தல், உணவு, அடிப்படை நலத் தேவைகளை வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் காலகர். 

சிறாரை கைவிட்டுவிடாதீர்கள் WCECCE

அனைத்து சிறாரின் சிறந்த நலன், கற்றல், உருவாக்கல், சிந்தித்தல், பிறருடன் அன்பான உயிர்த்துடிப்புள்ள உறவு கொள்ள உதவுதல் என்பவை வழியாக உதவும் இவ்வமைப்பு, சிறார் நலவாழ்வுக்கான அக்கறை, பெற்றோரின் ஈடுபாடு மற்றும் ஆதரவில் இருந்து பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும், என வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் காலகர். 

சிறாரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உகந்த உடல், உணர்ச்சி, அறிவுசார் மற்றும் ஆன்மீக நிலைமைகளுக்கு உறுதி அளிப்பது மாநிலங்களின் கடமை என்றும், கத்தோலிக்க திருஅவை உட்பட இப்பணித்துறையில் தகுதிவாய்ந்த, மற்றும் அனுபவம் உள்ள அனைவருடனும் அரசும் தன் ஒத்துழைப்பை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2022, 13:05