சீனா நாட்டுக் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் சீனா நாட்டுக் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் 

சீன அரசுடன் பலன்தரும் பேச்சுவார்த்தைகளை தொடர...

ஆயர்கள் நியமனம் குறித்து வத்திக்கானுக்கும் சீனாவுக்கும் இடையே 2018ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சீனாவில் கத்தோலிக்க ஆயர்களை நியமிப்பது குறித்து சீன அரசுக்கும் வத்திக்கானுக்கும் இடையே 2018ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், இரண்டாவது முறையாக மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருப்பீடத் தகவல் துறை அறிவித்துள்ளது.

ஆயர்கள் நியமனம் குறித்து இரு தரப்புகளுக்கும் இடையே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி  கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், ஏற்கனவே 2020ம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி, இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீன அரசுடன், மதிப்புடன் கூடிய பலன்தரும் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் நோக்கத்துடனும், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவுகளை வளர்க்கவும், சீன மக்கள் மற்றும் தலதிருஅவையின் நலனுக்காகவும் இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அக்டோபர் 22, சனிக்கிழமை வத்திக்கான் வெளியிட்ட அறிக்கை உரைக்கிறது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்திருந்த நேர்முகத்தில், இவ்வாண்டு அக்டோபர் மாதம் இந்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து எடுத்தியம்பியிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2022, 14:27