IORன் 2021ம் ஆண்டின் நிதிநிலை குறித்த அறிக்கை
மேரி தெரேசா: வத்திக்கான்
வத்திக்கான் வங்கி என பொதுவாக அறியப்படும், IOR எனப்படும் சமயப் பணிகளுக்கான நிறுவனம், பத்தாவது ஆண்டாக, நிதிநிலை குறித்த தன் ஆண்டறிக்கையை ஜூன் 07, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
IOR நிறுவனம், IAS-IFRS பன்னாட்டு கணக்கியல் தரத்தோடு ஒத்திணங்கிச் செல்லும்வண்ணம் தயாரித்துள்ள, 2021ம் ஆண்டின் நிதி நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்வாண்டில் நிகர இலாபம் ஒரு கோடியே 81 இலட்சம் யூரோக்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிதி அறிக்கை, முதலில் Mazars பன்னாட்டு அமைப்பின், இத்தாலிய தணிக்கை குழுவிடமிருந்து நற்சான்றிதழ் பெற்றபின்னர், அதற்கு IOR நிறுவனத்தின் கண்காணிப்புக் குழுவும் ஒருமித்து ஒப்புதல் அளித்தது. பின்னர் அது கர்தினால்கள் பணிக்குழுவின் பரிசீலனைக்காகவும் அனுப்பப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
IORன் நிர்வாகத்தின்கீழ் முதலீடுகள் அதிகரித்து வருவது, வாடிக்கையாளர்களுக்கு திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின்படி முதலீடு செய்வதையும், இந்நிறுவனத்தின் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு ஒத்தவண்ணம் செயல்படுவதையும் குறித்துக் காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்