தேடுதல்

பேரருள்திரு Janusz Urbanczyk  பேரருள்திரு Janusz Urbanczyk  

ஒவ்வொரு நெருக்கடியும் புது பார்வைகொண்ட திட்டங்களை உருவாக்குகிறது

"எரிபொருள்களை பயன்படுத்தும் முறைகளை மாற்றும்போது, அது நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டு வரும்" : பேரருள்திரு URBAŃCZYK.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போர் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துவதுடன், அந்நாட்டில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் உடல்நலம் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் பாதிக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார் திருப்பீட அதிகாரி ஒருவர்.  

COVID-19 பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து நிலையான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் வழியாக, OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புப்  பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கலந்துரையாடலின் இரண்டாவது ஆய்வுக்கூட்டத்தின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார், திருப்பீடத்தின் பிரதிநிதி பேரருள்திரு Janusz Urbanczyk  

உலக சுகாதார நெருக்கடிக்குப் பின், உக்ரைனில் போர் வெடித்துள்ளது, OSCEன் பகுதிகளில் ஒரு புதிய பாதுகாப்பு நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள பேரருள்திரு Urbanczyk அவர்கள், இது மற்ற எல்லா கேள்விகளையும் திசைமாற்றிவிட்டு, நமது பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக மாதிரிகளுக்கு மேலும் சவால்களை முன்வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் 

போர் எப்போதுமே சுற்றுச்சூழலுக்கும் மக்களின் கலாச்சார வளமைக்கும் அதிகமான தீங்கை விளைவிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ள பேரருள்திரு Urbanczyk, உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் மற்றும் அது ஏற்படுத்தியுள்ள எதிர்த்தாக்கங்கள் இதற்குச் சான்றுகளாக அமைந்துள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2022, 15:07