தேடுதல்

புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர்  

குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் 108வது உலக நாள்

“குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் உலகை கட்டியமைத்தல்” என்பது, உலகின் கட்டுமானப் பணியில், அவர்கள் ஆற்றவேண்டிய பங்கை அங்கீகரித்து, ஊக்குவிப்பதாகும் - திருப்பீடம்

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் 108வது உலக நாளுக்கென்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ள தலைப்பை, பிப்ரவரி 22, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

“குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருடன் வருங்காலத்தை கட்டியமைப்போம்" என்பது, குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் 108வது உலக நாளுக்குரிய தலைப்பாகத் திருத்தந்தை தெரிவுசெய்துள்ளார் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் துறை அறிவித்துள்ளது.

இத்தலைப்பு, கடவுளின் திட்டத்திற்கேற்ப, எவரும் ஒதுக்கப்படாமல், வருங்கால உலகத்தைக் கட்டியமைக்கும் பணியில் நமது பங்கை ஆற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறது என்றும், குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர்  துறை கூறியுள்ளது.

“குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் கட்டியமைத்தல்” என்பது, கட்டுமானப் பணியில், அவர்கள் ஆற்றவேண்டிய பங்கை அங்கீகரித்து, ஊக்குவிப்பதாகும் எனவும், இதன் வழியாக மட்டுமே, உலகினர் அனைவரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் தேவைப்படுவதை உறுதிசெய்யும் ஓர் உலகத்தை அமைக்க இயலும் எனவும், அந்த துறை அறிவித்துள்ளது.

திருத்தந்தை தெரிவுசெய்துள்ள இத்தலைப்பை மையப்படுத்தி வழங்கப்படும் அவரது செய்தி, ஆறு சிறு தலைப்புக்களைக் கொண்டிருக்கும் என்றும், இவ்வாண்டு இந்த உலக நாளுக்கு மேற்கொள்ளப்படும் தயாரிப்புகள், வருகிற மார்ச் மாதத்தின் இறுதியில் துவக்கப்படும் என்றும், அந்த துறை கூறியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2022, 14:00