ஐரோப்பாவின் OSCE கூட்டத்தில் பேரருள்திரு Januez Urbansizyk.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப்பின் பொருளாதார நிலையானத்தன்மை, நீதியுடன் கூடிய போட்டிகள், வளர்ச்சிப் போன்றவைகளில் மனிதகுல வளர்ச்சியின் முக்கியத்துவத்திற்கு வழங்கப்படவேண்டிய இடம் குறித்து ஐரோப்பாவின் OSCE கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு Januez Urbansizyk.
ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பான OSCEன் பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேரருள்திரு Januez Urbansizyk அவர்கள், மனித மாண்பை முற்றிலுமாகப் புரிந்துகொள்வதற்கு 'தொழில்' என்பதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பையும், நீடித்த அமைதியையும் கொணர்வதில் தொழிலின் முக்கிய இடத்தையும் சுட்டிக்காட்டினார்
கோவிட் பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் முறைசாரா பொருளாதாரப் பணிகளோடு தொடர்புடையோர் என எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாண்புடன் கூடிய தொழில் வாய்ப்புகளை வழங்கி குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவர்கள் பணியாற்ற உதவவேண்டியது அனைவரின் கடமை என்பதையும் வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு Januez Urbansizyk.
பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளின் மையமாக மனிதரை வைக்கும்போதுதான் மனித மாண்பும் சமுதாயமும் செழித்து வளரும் என்பதைத் திருப்பீடம் உறுதியாக நம்புவதாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒன்றிப்பிற்கான OSCE அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு Januez Urbansizyk.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்