தேடுதல்

Querida Amazonia என்ற தலைப்பில் திருத்தந்தையால் வெளியிடப்பட்ட ஏடு Querida Amazonia என்ற தலைப்பில் திருத்தந்தையால் வெளியிடப்பட்ட ஏடு 

Querida Amazonia ஏட்டை திருத்தந்தை வெளியிட்டதன் இரண்டாம் ஆண்டு

Querida Amazonia என்ற தலைப்பில் திருத்தந்தையால் வெளியிடப்பட்ட ஏடு, எதிர்பார்க்கப்பட்ட பயனளித்துக்கொண்டிருக்கிறது : கர்தினால் Mario Grech

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தென் அமெரிக்காவின் Amazon பகுதி மக்கள் வாழ்வு, மற்றும் உண்மை மாற்றத்திற்கான அவர்களின் குரலை மதித்து ஏற்றுச் செயல்பட திருஅவை வழங்கிய வாக்குறுதி, என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் உரைத்துள்ளார்.

Amazon பகுதி குறித்த ஆயர் மாமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவைகளின் தொகுப்பை 2020ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டதன் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு செய்தி வெளியிட்ட கர்தினால் Mario Grech அவர்கள், Querida Amazonia என்ற தலைப்பில் திருத்தந்தையால் வெளியிடப்பட்ட ஏடு, எதிர்பார்க்கப்பட்ட பயனளித்துக்கொண்டிருக்கிறது என்றார்.

அன்றைய பரிந்துரைகள் எனும் விதைகள் இன்னும் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதாகவும், பல பலன் கொடுத்துள்ளதாகவும், ஏனையவை பலன் கொடுக்கும் நிலையில் உள்ளதாகவும் உரைத்த உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் Grech அவர்கள், சமூக, கலாச்சார,  சுற்றுச்சூழல், மற்றும், திருஅவைத் தொடர்புடைய கனவுகளை உள்ளடக்கிய Querida Amazonia ஏடு, Amazon பகுதி மக்களுக்ககான திருத்தந்தையின் அன்புக் கடிதமாகவும் உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.

Amazon பகுதிவாழ் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேய்ப்புப்பணித் திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்ற திருத்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க, பல திட்டங்கள் மக்கள் நலன் கருதி திருஅவையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் Grech.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2022, 15:41