வத்திக்கான் வங்கி வத்திக்கான் வங்கி  

நிதி மேலாண்மையில் திருப்பீடத்தில் தொடர் முன்னேற்றம் - ASIF

குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கையில், திருப்பீடம், மற்றும், வத்திக்கான் நாட்டின் நிறுவனங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது - ASIF அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நிதி மேலாண்மை, பண மோசடிக்கு எதிரான நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவதைத் தடுத்தல் போன்ற விடயங்களில், உலக அளவில் மிகச் சிறந்தமுறையில் செயல்பட்டுவரும் நாடுகளில் வத்திக்கானும் ஒன்று என, ASIF எனப்படும், நிதி கண்காணிப்பு, மற்றும், தகவல் அதிகார, உலகளாவிய அமைப்பு, ஜூலை 15, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. (Check the date. I think the report came yesterday)

2020ம் ஆண்டில், உலக அளவில் இடம்பெற்ற பணப் பரிமாற்றம் குறித்த ஆய்வறிக்கையை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ASIF அமைப்பு, நிதி மேலாண்மை குறித்த விடயத்தில் திருப்பீடம், மிகச்சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது என்றும், இவ்விடயத்தில், திருப்பீடத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

இவ்விடயத்தில் திருப்பீடத்திற்கு, அதற்குள்ளேயும், பன்னாட்டு அளவிலும், நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது எனவும், 2020ம் ஆண்டில், சந்தேகத்துக்குரியவை என கண்டுணரப்பட்ட 89 நடவடிக்கைகளில், 16 குறித்த விளக்கம் கேட்டு, நீதியை ஊக்குவிக்கும் அலுவலகத்திற்கும், 49 குறித்த விளக்கம் கேட்டு, மற்ற வத்திக்கான் அதிகாரிகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும், ASIF அமைப்பு கூறியுள்ளது.

எனினும், மொத்தத்தில், திருப்பீடத்தில், 2019ம் ஆண்டைவிட, 2020ம் ஆண்டில், நிதி மேலாண்மையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது எனக் கூறும் ASIF அமைப்பு, குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கையில், திருப்பீடம், மற்றும், வத்திக்கான் நாட்டின் நிறுவனங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளது.

வத்திக்கான் வங்கி என, பொதுவாக அறியப்படும் IOR அமைப்பு மேற்கொள்ளும் பணப்பரிமாற்றச் செயல்பாடுகளும், திருப்பீடத்தின் நிதி மேலாண்மைக்கு உதவுகின்றது என்றும், ASIF அமைப்பின் 2020ம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2021, 15:45