தென்னாப்ரிக்காவில் தேசிய அளவில் ஊரடங்கு தென்னாப்ரிக்காவில் தேசிய அளவில் ஊரடங்கு 

ஆப்ரிக்க நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படும் முயற்சிக்கு ஆதரவு

ஆப்ரிக்க நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கோவிட்-19 காலக்கட்டத்தில் மிகவும் அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க நாடுகளின் வெளிநாட்டு கடன்கள் இரத்துசெய்யப்படவேண்டும் என்ற நடவடிக்கைக்கு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, தன் ஆதரவை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, தன் கோவிட்-19 தடுப்புக் குழுவுடன் இணைந்து நடத்திய மெய்நிகர் கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கோவிட்-19 காலக்கட்டத்தில் மிகவும் அவசியம் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடி பொதுச்செயலர், அருள்சகோதரி Alessandra Smerilli அவர்கள் கூறினார்.

ஆப்ரிக்காவின் கானா நாட்டு குமாசி பேராயரும், காரித்தாஸ் ஆப்ரிக்காவின் தலைவருமான பேராயர் Gabriel Justice Yaw Anokye அவர்கள் கூறுகையில், வறிய மற்றும், வலுவிழந்த மக்களின் நிலையைப் பார்த்து, தெளிந்துதேர்ந்து, அவர்கள் சார்பாகச் செயல்படவேண்டியதற்கு இதுவே நேரம் என்று குறிப்பிட்டார்.

ஆப்ரிக்கா, மற்றும், மடகாஸ்கர் ஆயர் பேரவையின் பொதுச் செயலர் Henry Akaabiam அவர்கள் உரைக்கையில், இன்னல், மற்றும், நெருக்கடி காலங்களில், கடவுளின் செயலைக் காண முடிகின்றது என்று கூறினார்.

வெளிநாட்டு கடனும், வறுமையும் நெருங்கிய உறவினர்கள், அவை ஒன்றுசேர்ந்தே பயணிக்கின்றன என்று கூறிய, கிழக்கு மற்றும், மத்திய ஆப்ரிக்க பெண் துறவியர் கழகத்தின் செயலர் அருள்சகோதரி Hellen A. Bandiho அவர்கள், இந்த பிரச்சனை அறநெறி சார்ந்தது என்று கூறினார்.

காரித்தாஸ் ஆப்ரிக்கா, ஆப்ரிக்கா மற்றும், மடகாஸ்கர் ஆயர் பேரவை (SECAM), ஆப்ரிக்கா மற்றும், மடகாஸ்கர் இயேசு சபை மாநிலம் (JCAM), கிழக்கு மற்றும், மத்திய ஆப்ரிக்க அருள்சகோதரிகள் கழகம் (ACWECA) ஆகிய அமைப்புக்களின் ஒத்துழைப்போடு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், அதன் கோவிட்-19 தடுப்புக் குழுவும் இணைந்து நடத்திய மெய்நிகர் கூட்டத்தில், ஆப்ரிக்க நாடுகளின் வெளிநாட்டு கடன்கள் இரத்து செய்யப்படவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2021, 15:07