வத்திக்கான் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி பொறுப்பாளர் அருள்பணி செஸ்தோ குவர்செத்தி வத்திக்கான் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி பொறுப்பாளர் அருள்பணி செஸ்தோ குவர்செத்தி 

வத்திக்கான் வானொலியின் வயது 90

திருத்தந்தையின் குரலையும், எண்ணங்களையும் உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட வத்திக்கான் வானொலி, தன் ஆரம்ப காலத்திலிருந்து, அன்றன்றைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய தயங்கவில்லை

மேரி தெரேசா: வத்திக்கான்

பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று, வத்திக்கான் வானொலி தன் 90வது வயதை நிறைவுசெய்கிறது. 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கப்பட்ட வத்திக்கான் வானொலி, திருத்தந்தையின் குரலாக, கடந்த 90 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே வடிவமைத்து, உலகில் பணியாற்றிவருகிறது. குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் தனிப்பட்ட கவனத்துடன் இந்த வொனொலி செயலாற்றி வருகிறது. திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், 1961ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியன்று கூறியதுபோல, திருத்தந்தையின் குரலையும், எண்ணங்களையும் உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட வத்திக்கான் வானொலி, தன் ஆரம்ப காலத்திலிருந்து, அன்றன்றைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய தயங்கவில்லை. வத்திக்கான் வானொலியின் இந்தியப் பிரிவின் இயக்குனராக, 11 ஆண்டுகள் பணியாற்றிய இயேசு சபை அருள்பணி சேவியர் ராஜன் அவர்கள், வானொலியின் 90வது ஆண்டு நிறைவுக்காக, வாட்சப் வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களுக்குக் கூறியதை இப்போது ஒலிக்கச் செய்கின்றோம். அருள்பணி சேவியர் ராஜன் அவர்கள், வத்திக்கான் வானொலியில் இந்திய மொழிகள், தினசரி ஒலிபரப்பைத் தொடங்குவதற்கும், ஒலிபரப்பு நேரத்தை அதிகரிப்பதற்கும் காரணமாக இருந்தவர்.

வத்திக்கான் வானொலிக்கு வயது 90

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2021, 14:42