2020 டிசம்பர் 8 முதல், 2021 டிசம்பர் 8 முடிய சிறப்பிக்கப்படும் புனித யோசேப்பு ஆண்டு 2020 டிசம்பர் 8 முதல், 2021 டிசம்பர் 8 முடிய சிறப்பிக்கப்படும் புனித யோசேப்பு ஆண்டு 

புனித யோசேப்பு ஆண்டில் சிறப்பான நிறைபேறு பலன்கள்

புனித யோசேப்பு ஆண்டை முன்னிட்டு, வழங்கப்படும் சிறப்பு நிறைபேறு பலன்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் புனித யோசேப்பு ஆண்டை முன்னிட்டு, இவ்வாண்டு வழங்கப்படும் சிறப்பு நிறைபேறு பலன்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

புனித யோசேப்பு ஆண்டின் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்குபெறும் அனைவரும், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுதல், திருப்பலிகளில் பங்குபெறுவதல், திருத்தந்தையின் கருத்துக்களுக்காக செபித்தல், இவ்வாண்டிற்கென குறிக்கப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் ஆகியவற்றின் வழியாக, இந்த நிறைபேறு பலன்களை பெறமுடியும் என உரைக்கும் இத்திருப்பீடத்துறை, இதனை சிறப்பான விதத்தில் பெறக்கூடியவர் யார் என்ற வழிகாட்டுதலையும் தந்ததுள்ளது.

இயேசு கற்பித்த 'வானிலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தியானிப்போர், யோசேப்பு குறித்த ஒரு நாள் தியானத்தில் கலந்துகொள்வோர், புனித யோசேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி இரக்க செயல்களில் ஈடுபடுவோர், செபமாலை செபிக்கும் குடும்பங்கள், செபமாலை செபிக்கும் மண ஒப்பந்தமாகியிருப்போர்,  வேலை தேடி அலைவோருக்காக செபிப்போர், துன்புறும் திருஅவைகளுக்காகவும், விசுவாசத்திற்காக துன்புறும் கிறிஸ்தவர்களுக்காகவும் செபிப்போர், என வரையறுக்கும் இந்த மனசாட்சி திருப்பீடத்துறை, இன்னும் சில விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.

புனித யோசேப்பின் திருப்புகழ் மன்றாட்டை செபிப்போர், இந்த கோவிட்  காலத்தில், நோயாளிகள், முதியோர்,  வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் இருப்போர் ஆகியோரும், இறைவனை நோக்கி செபித்து, பாவத்தை விலக்கி வாழ்வதன் வழியாக, இந்த நிறைபேறு பலன்களை பெறமுடியும் என்கிறது, திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2021, 15:02