புர்கினா பாசோ நாட்டு ஆயர்கள் புர்கினா பாசோ நாட்டு ஆயர்கள் 

புர்கினா பாசோ தலத்திருஅவையின் உரிமைகள் அங்கீகரிப்பு

நன்னெறி, ஆன்மீக, மற்றும், பொருளாதார நலனுக்காகவும், பொதுநல மேம்பாட்டிற்காகவும் ஒன்றிணைந்து உழைக்க, புர்கினா பாசோ நாட்டுக்கும் திருஅவைக்கும் இடையே ஒப்பந்தம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புர்கினா பாசோ நாட்டு தலத்திருஅவையின் சட்ட ரீதியான அங்கீகாரம் குறித்து கடந்த ஆண்டு திருப்பீடத்திற்கும் அந்நாட்டிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம், செப்டம்பர் 7, இத்திங்கள் முதல் நடைமுறைக்கு வருவதாக திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்தது.

2019ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வத்திக்கானுக்கும், புர்கினா பாசோ நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட, அந்நாட்டு தல திருஅவையின் செயல்பாட்டு உரிமைகளை அங்கீகரிக்கும் ஒப்பந்தம், செப்டம்பர் 7ம் தேதி, இத்திங்கள் முதல் நடைமுறைக்கு வருவதாக திருப்பீடத்திற்கான புர்கினா பாசோ நாட்டு தூதரகம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது இச்செயலகம்.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு இத்திங்கள் முதல் அமலுக்கு வந்துள்ள ஒப்பந்தத்தின்படி, தலத்திருஅவை தன் செயல்பாடுகளை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஏற்று நடத்த அனுமதி பெறுகின்றது.

திருஅவையின்  நிர்வாகப் பணி நியமனங்கள் அங்கிகரிக்கப்படுவதுடன், திருஅவையின் நிறுவனங்களும் அரசு அங்கீகாரத்தை பெறுகின்றன.

நாடும், தலத்திருஅவையும் தங்கள் சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் காப்பாற்றிக்கொள்வதுடன், நன்னெறி, ஆன்மீக, மற்றும், பொருளாதார நலனுக்காகவும், பொதுநல மேம்பாட்டிற்காகவும் ஒன்றிணைந்து உழைக்கவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2020, 14:24