தேடுதல்

வணக்கத்துக்குரிய Maria Antonia Samà வணக்கத்துக்குரிய Maria Antonia Samà  

60 ஆண்டுகளாக படுக்கையிலிருந்தவர் அருளாளராக அறிவிக்கப்பட...

Maria Antonia அவர்கள், இளம் வயதிலேயே கடுமையான ஒரு நோயால் தாக்கப்பட்டு, முழங்கால் உயர்ந்தநிலையில், முடக்குவாதநோயால் தாக்கப்பட்டார். புனித புரூனோவின் துறவி என்று இவர் மக்களால் அழைக்கப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

அருளாளர் மற்றும், வணக்கத்துக்குரியவர்கள் என்ற நிலைகளுக்கு உயர்த்தப்படுவதற்கென, வணக்கத்துக்குரிய ஒருவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை மற்றும், நான்கு இறைஊழியர்களின் புண்ணியம்நிறை வாழ்வு நற்பண்புகளுக்கு இசைவு தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், ஜூலை 10, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, இந்த ஐந்து பேரின் வாழ்வு குறித்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.

பொதுநிலையினரான, Maria Antonia Samà அவர்கள், தென் இத்தாலியின் Catanzaro மாநிலத்தில், Sant’Andrea Jonio என்ற நகரில், 1875ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி பிறந்தார். வாதநோய் காரணமாக, அறுபது ஆண்டுகள், படுக்கையிலே கிடந்த இவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுள்ளார்.

மரிய அந்தோனியா அவர்கள், இளம் வயதிலேயே கடுமையான ஒரு நோயால் தாக்கப்பட்டு, முழங்கால் உயர்ந்தநிலையில், முடக்குவாதத்தால் துன்புற்றார். புனித புரூனோவின் துறவி என்று மக்களால் அழைக்கப்பட்ட இவர், 1953ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி, தனது 78வது வயதில் இறையடி சேர்ந்தார். இறைவனில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கள் பலர் இவரிடம் தங்கள் வேதனைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றனர். ஒவ்வொரு நாளும் மூன்று முறை செபமாலை செபித்தார், மரிய அந்தோனியா.    

மேலும், இத்தாலியில் பிறந்து, மெக்சிகோவில் இறையடி சேர்ந்த, இயேசு சபையின் அருள்பணி Eusebio Francesco Chini (1645-1711);

இஸ்பெயின் நாட்டில், இயேசுவின் பணியாளர் அமைப்பை உருவாக்கியவருள் ஒருவரான, அருள்பணி Mariano Giuseppe de Ibargüengoitia y Zuloaga (1815-1888);

இஸ்பெயின் நாட்டில், மீட்பரின் தோழர் சபையைத் தோற்றுவித்த Maria Félix Torres (1907-2001);

இத்தாலி நாட்டவரான பொதுநிலையினர் Angiolino Bonetta (1948-1963), திருச்சிலுவையின் அமைதிப் பணிகள் அமைப்பைச் சேர்ந்தவர்.

இந்நால்வரின் புண்ணியம்நிறை வாழ்வு நற்பண்புகளுக்கு இசைவு தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2020, 13:31