போலந்து காரித்தாஸ் அமைப்பின் பணிகள் போலந்து காரித்தாஸ் அமைப்பின் பணிகள் 

கொள்ளைநோய் காலத்திற்குப்பின் உருவாகும் நெருக்கடி

உலகில், கோவிட்-19ஆல் உயிரிழப்பவர்களைவிட, மலேரியா, தற்கொலை, விபத்து, புற்றுநோய், பஞ்சம், கருக்கலைப்பு, மற்றும் ஏனைய தொற்றுநோய்களால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகம் - WHO

உலகில், கோவிட்-19ஆல் உயிரிழப்பவர்களைவிட, மலேரியா, தற்கொலை, விபத்து, புற்றுநோய், பஞ்சம், கருக்கலைப்பு, மற்றும் ஏனைய தொற்றுநோய்களால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகம் - WHO

கொள்ளைநோய் காலத்திற்குப்பின் உருவாகும் நெருக்கடி

 

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் முடிவுற்றபின் இடம்பெறக்கூடிய பெரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து எச்சரித்துள்ள, உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அந்நெருக்கடியை சமாளிப்பதற்கு, உலக சமுதாயம்,  துணிச்சலுடன், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. 

உலகளாவிய அரசியலும், ஊடகங்களும், கடந்த நான்கு மாதங்களாக, கொரோனா கிருமி பரவுதல் குறித்தே கவனம் செலுத்தி வந்துள்ளன என்றும், இக்கொள்ளைநோய்க் காலத்திற்குப்பின் உலகம் எதிர்கொள்ளவிருக்கும் சூழல் மிகவும் சிக்கலாகவும், அதிர்ச்சிதரக்கூடியதாகவும் இருக்கும் என்றும், காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.

தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களைக் காட்டிலும், அந்த நோய் முடிவடைந்தபின், உலகில், குறிப்பாக, மிக வறிய நாடுகளில் நலிந்தமக்கள் மத்தியில் இடம்பெறக்கூடிய இறப்புகள் அதிகமாக இருக்கும் என்றும், உலகளாவிய காரித்தாஸ் எச்சரித்துள்ளது. 

கோவிட் 19 தொற்றுநோயின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால்,  பல நாடுகளில் உணவுப் பிரச்சனை கடுமையாய் இருக்கும் என்றும், இந்த ஆண்டு பசிக்கொடுமையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காக, அதாவது, 23 கோடியாக இருக்கும் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது என்றும், காரித்தாஸ் கூறியுள்ளது. 

ஆப்ரிக்க கண்டம், கோவிட்-19 கொள்ளைநோயால் மட்டுமல்ல, வெள்ளம், வறட்சி, வெட்டுக்கிளி ஆக்ரமிப்பு, மோசமான அறுவடை போன்றவை காரணமாக, பசிப் பிரச்சனையை, அதிகம் எதிர்கொள்ளும் என்றும், காரித்தாஸ் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா, மற்றும், ஆசியாவிலுள்ள பல நாடுகள் ஏற்கனவே கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பதையும், உலகளாவிய காரித்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளது. (Zenit)

உலக நலவாழ்வு நிறுவனம்

இதற்கிடையே, கோவிட்-19ஆல் உயிரிழப்பவர்களைவிட, மலேரியா, தற்கொலை, விபத்து, புற்றுநோய், பஞ்சம், கருக்கலைப்பு மற்றும் ஏனைய தொற்றுநோய்களால் உலகில் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகம் என்று, உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

எடுத்துக்காட்டாக, உலகில் கோவிட்-19ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,37 469,   அதேநேரம் தற்கொலையால் 3,57,785 பேரும், பசியால் 3,731,427 பேரும், மலேரியாவால் 3,27,267 பேரும் இறந்துள்ளனர் என்று, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2020, 12:36