புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை 

“இயேசு கிறிஸ்துபோன்று கட்டாயமாகத் தப்பித்துச்செல்ல”

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள், செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“இயேசு கிறிஸ்துபோன்று கட்டாயமாகத் தப்பித்துச்செல்ல” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 106வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்குரிய தலைப்பாகத் தெரிவுசெய்துள்ளார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் மார்ச் 06, இவ்வெள்ளியன்று அறிவித்தது.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் 106வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும் செய்தி, இத்தலைப்பை மையப்படுத்தி அமைந்திருக்கும் என்று அத்தொடர்பகம் கூறியது.

உலக அளவில் நான்கு கோடியே பத்து இலட்சத்திற்கு அதிகமான மக்கள் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள சூழலில், இம்மக்களுக்கு ஆற்ற வேண்டிய மேய்ப்புப்பணியை திருத்தந்தையின் செய்தி வலியுறுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இளமையான இயேசுவும், அவரின் குடும்பமும், புலம்பெயர்ந்த மற்றும், குடிபெயர்ந்தவர்களாகப் பெற்றுள்ள அனுபவத்தோடு, இந்த உலக நாளுக்குரிய சிந்தனை தொடங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

106வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழங்கும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2020, 15:01