தேடுதல்

Vatican News
கல்வி பற்றிய உலகளாவிய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் கல்வி பற்றிய உலகளாவிய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (Vatican Media)

வருகிற அக்டோபரில் கல்வி பற்றிய உலகளாவிய மாநாடு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் நடைபெறும் கல்வி பற்றிய உலக மாநாட்டில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களும் பங்குகொள்ள அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்:  வத்திக்கான் செய்திகள்

இளைய தலைமுறைகளுக்கும், அத்தலைமுறைகளோடும் நம் அர்ப்பணத்தை உயிரூட்டம் பெறச்செய்யும் நோக்கத்தில், வருகிற மே மாதத்தில் நடைபெறவிருந்த, கல்வி பற்றிய ஓர் உலகளாவிய மாநாடு, வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் என்று, கத்தோலிக்க கல்வி பேராயம் அறிவித்துள்ளது.

உலகின் பல்வேறு மாணவர்களின் மிகச் சிறந்த கல்வி அனுபவப் பகிர்வுகளுடன், மே மாதம் 10ம் தேதி முதல், 17ம் தேதி வரை, பல்வேறு  நிகழ்வுகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், கொரோனா தொற்றுக்கிருமி தாக்கத்தினால், இம்மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று, கத்தோலிக்க கல்வி பேராயம் அறிவித்துள்ளது. 

மேலும், கல்வி பற்றி ஓர் உலகளாவிய உடன்பாட்டை உருவாக்கும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட பன்னாட்டு மாநாடு, வருகிற அக்டோபர் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்று, அக்டோபர் 15ம் தேதி, அந்த உடன்பாடு கையெழுத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கல்வி பற்றிய உடன்பாட்டிற்கு, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மதங்கள், பன்னாட்டு அமைப்புகள், பல்வேறு மனிதாபிமான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொருளாதார, அரசியல் மற்றும், கலாச்சார உலகினர் எல்லாரும் அர்ப்பணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

03 March 2020, 14:57