தேடுதல்

Vatican News
அமேசான் திருத்தூது அறிவுரை மடல் - செய்தியாளர்கள் கூட்டம் அமேசான் திருத்தூது அறிவுரை மடல் - செய்தியாளர்கள் கூட்டம் 

அமேசான் திருத்தூது அறிவுரை மடல் - செய்தியாளர்கள் கூட்டம்

"Querida Amazonia", அதாவது, "அன்புக்குரிய அமேசான்" என்ற தலைப்பில் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை உருவாக்கியுள்ள திருத்தூது மடல், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, மற்றும் அரேபியம் ஆகிய ஏழு மொழிகளிலும் வெளியிடப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் நிலப்பகுதியை மையப்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள திருத்தூது மடல், பிப்ரவரி 12, இப்புதனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

"Querida Amazonia", அதாவது, "அன்புக்குரிய அமேசான்" என்ற தலைப்பில் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை உருவாக்கியுள்ள இத்திருத்தூது மடல், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, மற்றும் அரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டது.

ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலர், கர்தினால் Lorenzo Baldisseri, அமேசான் ஆயர்கள் மாமன்றத்தின் சிறப்புச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Michael Czerny, அருள்பணி Adelson Araújo dos Santos, அருள் சகோதரி Augusta de Oliveira மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளரும், 2007ம் ஆண்டு உலக அமைதி நொபெல் விருது பெற்றவருமான Carlos Nobre ஆகியோர் இந்த அறிவுரை மடலைக் குறித்து, தங்கள் கருத்துக்களை, செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

அமேசான் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தனிப்பட்ட செயலரும், அமேசான் பகுதியில் உள்ள Puerto Maldonadoவின் ஆயருமான David Martínez de Aguirre Guinea அவர்கள், இந்த அறிவுரை மடலைக் குறித்து உருவாக்கியிருந்த ஒரு குறும்படம், செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டது.

12 February 2020, 15:09