தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை 

அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் 24வது உலக நாள்

துறவியர், தம் வாழ்வுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதற்கு, முதலில் அவர்களது பார்வை கடவுளை நோக்கியதாக இருக்க வேண்டியது மிக முக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் 24வது உலக நாள் பிப்ரவரி 2, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 01, இச்சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுகின்றார்.

இந்த உலக நாளுக்கென வத்திக்கான் செய்திகளிடம் பேசிய, அர்ப்பண வாழ்வு வாழ்வோர் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள், திருஅவையில் துறவியர், சாட்சிய வாழ்வு வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதாக, இந்த உலக நாள் அமைந்துள்ளது என்று கூறினார்.

"இயேசு நம்மை பெருமெண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கவில்லை மற்றும், அனுப்பவில்லை, ஆனால் அவர் நம்மை ஒரு பணிக்காக அழைத்திருக்கிறார்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டில், மொராக்கோவில் திருத்தூது பயணம் மேற்கொண்டபோது அருள்பணியாளர் மற்றும், துறவியரிடம் கூறிய சொற்களே, இந்த 24வது உலக நாளின் கருப்பொருள் என்று, கர்தினால் Aviz அவர்கள் கூறினார்.

சவால்கள், புதுப்பித்தல், வளங்கள் போன்ற தலைப்பில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் Aviz அவர்கள், துறவியர், தம் வாழ்வுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதற்கு, முதலில் அவர்களது பார்வை, கடவுளை நோக்கியதாக இருக்க வேண்டியது மிக முக்கியம் என்று கூறினார்

அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் உலக நாளை, 1997ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் உருவாக்கினார். இந்த நாள், நம் ஆண்டவர் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட நாளின் நினைவாக சிறப்பிக்கப்படுகின்றது. மெழுகுதிரி திருப்பலி நாள் எனவும் இது அழைக்கப்படுகிறது.

01 February 2020, 15:08