திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச் 

'அயலாரை அன்புகூர்தல்' என்ற தலைப்பில் பேராயர் யுர்கோவிச்

மனித உடன்பிறந்த நிலையின் மதிப்பு, புலம் பெயர்ந்தோர் மற்றும் குட்டியேற்றதாரர்களை வரவேற்றல், அமைதிக்கான ஆயுதக்களைவின் முக்கியத்துவம் என்ற தலைப்புக்களில் திருப்பீடத்தின் கருத்துகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மதங்களிடையே உரையாடல்கள் பற்றிய ஐந்தாவது பன்னாட்டு கூட்டத்தில், 'அயலாரை அன்புகூர்தல்' என்ற தலைப்பில் உரையாற்றினார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகச் செயல்படும் பேராயர் யுர்கோவிச் அவர்கள், அங்கு நடைபெற்ற பன்னாட்டு கூட்டத்தில் உரையாற்றியபோது, மனித உடன்பிறந்த நிலையின் மதிப்பு, புலம் பெயர்ந்தோர் மற்றும் குட்டியேற்றதாரர்களை வரவேற்றல், அமைதிக்கான ஆயுதக்களைவின் முக்கியத்துவம் என்ற தலைப்புக்களில், தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

திருத்தந்தைக்கும் Al-Azhar இஸ்லாமிய தலைமைக் குருவுக்கும் இடையே, கடந்த ஆண்டு அபுதாபியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மையமாக வைத்து, மனித உடன்பிறந்த நிலைப்பற்றிய தன் கருத்துகளை, பேராயர் யுர்கோவிச் அவர்கள் வழங்கினார்.

குடியேற்றத்தாரர் மற்றும் புலம் பெயர்ந்தோர் குறித்து எடுத்துரைக்கும்போது, இன்றைய உலகில், கட்டாயத்தின்பேரிலும், பாகுபாடுகள், சித்ரவதைகள், மோதல்கள், இயற்கை பேரிடர்கள் போன்றவைகளாலும் இடம்பெயரும் மக்களை, ஒருமைப்பாட்டுணர்வுடனும் பிறரன்புடனும் வரவேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அமைதிக்காக அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், ஆயுதக்களைவுகளையும் ஆயுதக்கட்டுப்பாடுகளையும் திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி, அதற்கு ஊக்கமளித்து வந்துள்ளது என்பதையும் எடுத்தியம்பினார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் யுர்கோவிச்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2020, 15:16