"மனித உடன்பிறந்த நிலை” என்ற ஆவணம் கையெழுத்திடப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அபு தாபியில் "மனித உடன்பிறந்த நிலை” என்ற ஆவணம் கையெழுத்திடப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அபு தாபியில் 

அபு தாபியில், முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு Zayed விருது வழங்கப்பட்ட வேளையில் அளிக்கப்பட்ட தொகை முழுவதையும், மியான்மார் நாட்டின் ரொகிங்கியா இனத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், Al-Azhar பல்கலைக்கழகத்தின் தலைமை குருவான Sheikh Ahmed el-Tayeb அவர்களும், “உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை” என்ற தலைப்பில், வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் ஒன்றில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி  கையெழுத்திட்டதன் முதலாம் ஆண்டு நினைவு, அபு தாபியில், இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தலைமை குரு, Sheikh Ahmed el-Tayeb அவர்களும், அனுப்பியிருந்த காணொளிச் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அபு தாபியின் Manarat al Saadiyat அரங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு, அபு தாபியின் நீதிபதி ஆப்தேல் சலாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட செயலரான அருள்பணி Yoannis Gaid ஆகியோர் உட்பட, பலர் உரையாற்றினர்.

கடந்த ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபியில் பயணம் மேற்கொண்ட வேளையில், அவருக்கு மனித உடன்பிறந்த நிலை Zayed விருது வழங்கப்பட்ட வேளையில் அளிக்கப்பட்ட தொகை முழுவதையும், மியான்மார் நாட்டின் ரொகிங்கியா இனத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளார் என்று அருள்பணி Gaid அவர்கள், இந்நிகழ்வில் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அபு தாபியின் வெளியுறவுத் துறை அமைச்சர், Abdullah bin Zayed Al Nahyan அவர்கள் பேசுகையில், மனித உடன்பிறந்த நிலை Zayed விருது, இனி, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தலைமை குரு Sheikh Ahmed el-Tayeb அவர்களும், இணைந்து வெளியிட்ட உடன்பிறந்த நிலை ஏடு, அபு தாபியின் பள்ளிகளில், பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2020, 15:09