தேடுதல்

Vatican News
கடல் பயணத்தில் விபத்துக்குள்ளானவர்களைக் காக்கும் செஞ்சிலுவை சங்கத்தினர் கடல் பயணத்தில் விபத்துக்குள்ளானவர்களைக் காக்கும் செஞ்சிலுவை சங்கத்தினர்  (ANSA)

நலிவுற்றோரைக் காக்கும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை

பேராயர் யூர்க்கோவிச் : செஞ்சிலுவை, மற்றும், செம்பிறை சங்கங்கள், இன்றளவும், கருவிகள் வழியாக அன்றி, மனிதர்களுடன் கொள்ளும் நேரடித் தொடர்புகளில் நம்பிக்கைக் கொண்டிருப்பது, ஆறுதல் தருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றவர்களைக் காக்கும் பணியில் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் ஆற்றிவரும் பணிகளை திருப்பீடம் பாராட்டுகிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், டிசம்பர் 11, இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய மனித மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பது செஞ்சிலுவை, மற்றும், செம்பிறை சங்கங்களின் நோக்கமாக அமைந்துள்ளதற்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார், பேராயர் யூர்க்கோவிச்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றையச் சூழலில், மனிதர்களைத் தாக்குவதற்கும், மனிதர்களைக் காப்பதற்கும் கருவிகள் தனித்து இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், செஞ்சிலுவை, மற்றும், செம்பிறை சங்கங்கள், இன்றளவும், கருவிகள் வழியாக அன்றி, மனிதர்களுடன் கொள்ளும் நேரடித் தொடர்புகளில் நம்பிக்கைக் கொண்டிருப்பது, ஆறுதல் தருகிறது என்று குறிப்பிட்டார்.

12 December 2019, 16:00