தேடுதல்

திருத்தந்தையும், பெரு நாட்டில் பூர்வீக இனத் தலைவர்களும் திருத்தந்தையும், பெரு நாட்டில் பூர்வீக இனத் தலைவர்களும் 

அமேசான் மாமன்றம் – முக்கிய நபர்கள் பூர்வீக மக்கள்

அமேசானில் பலர், குறிப்பாக, அமெரிக்க பூர்வீக இனத்தவரும், அக்கால அடிமைகளின் தலைமுறைகளும் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், அக்டோபர் 07, இத்திங்கள் காலையில் நடைபெற்ற, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் பொது அமர்வு பற்றிய செய்தியாளர் சந்திப்பில், உற்றுக்கேட்டல், மகிழ்வு ஆகிய இரண்டு உணர்வுகளே மேலோங்கி இருந்தன என அறிவிக்கப்பட்டது.

முதல் பொது அமர்வில் உரையாற்றிய, தொமினிக்கன் சபையைச் சேர்ந்தவரும், இந்த மாமன்றத்தின் சிறப்பு செயலர்களில் ஒருவருமான ஆயர் David Martínez De Aguirre Guinea  அவர்கள், அமேசான் என்ற ஒரு பகுதி இருக்கின்றது, அது முக்கியமானது என்ற விழிப்புணர்வை, இந்த மாமன்றம் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

இந்த மாமன்றத்தின் முக்கிய நபர்களாகிய அமேசான் மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய அவர், பூர்வீக மக்கள், பொருள்களாக இல்லாமல், குடிமக்களாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த மாமன்றம் வத்திக்கானில் நடைபெறுவதே, அமேசான், திருஅவையின் மையமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது என்றும் ஆயர் David Martínez De Aguirre Guinea அவர்கள் குறிப்பிட்டார்.

அமேசான் பகுதியின் பிரெஞ்ச் கயானா நாட்டின் Cayenne ஆயர் Emmanuel Lafont அவர்கள் உரையாற்றுகையில், அமேசானில் பலர், குறிப்பாக, அமெரிக்க பூர்வீக இனத்தவரும், அக்கால அடிமைகளின் தலைமுறைகளும் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர் என்று கூறினார்.

பூர்வீக மக்களின் கலாச்சாரம் அழிந்து கொண்டிருக்கின்றது என்றுரைத்த ஆயர் Lafont அவர்கள், அமேசான் மக்களை ஏற்று, ஆதரவு வழங்கும் வழிகளை திருஅவை கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 16:36