தேடுதல்

கர்தினால் லொரென்சோ பால்திசேரி கர்தினால் லொரென்சோ பால்திசேரி 

அமேசான் உலக ஆயர்கள் மாமன்றம், செய்தியாளர் கூட்டம்

அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில் அக்டோபர் 6ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடைபெறும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில், அக்டோபர் 06, வருகிற ஞாயிறன்று துவங்கும் அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து, அக்டோபர் 3, இவ்வியாழனன்று, கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள் தலைமையிலான குழு செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.

‘திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகள்’ என்ற தலைப்பில், அக்டோபர் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த உலக ஆயர்கள் மாமன்றம் குறித்துப் பேசிய, கர்தினால் பால்திசேரி அவர்கள், அமேசான் பகுதியிலுள்ள ஆயர்கள், துணை ஆயர்கள், அமேசான் பகுதி குறித்து ஆர்வமுடைய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் உட்பட 184 பேரவைத் தந்தையர் இதில் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்தார்.

பிரெஞ்ச் கயானா, கயானா குடியரசு, சுரினாம், வெனெசுவேலா, கொலம்பியா, பிரேசில், பொலிவியா, பெரு ஆகிய ஒன்பது நாடுகள் அமேசான் பகுதியைக் கொண்டிருக்கின்றன, எனவே, பேரவைத் தந்தையருள் 113 பேர், இப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும், கர்தினால் பால்திசேரி அவர்கள் அறிவித்தார்.

28 கர்தினால்கள், 29 பேராயர்கள், 62 ஆயர்கள், 7 துணை ஆயர்கள், 27 அப்போஸ்தலிக்க நிர்வாகிகள் என, இதில் கலந்துகொள்வோரை விவரித்துள்ள கர்தினால், 20 அருள்சகோதரிகள் உட்பட, 35 பெண்களும் இதில் கலந்துகொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2019, 15:45