பாதையில் தர்மம் கேட்கும் பெண்மணி பாதையில் தர்மம் கேட்கும் பெண்மணி 

ஜெனோவாவில் திருத்தந்தையின் தர்மச் செயல்கள்

"திருத்தந்தையின் சலவையகம்" என்ற பெயரில், வீடற்றவர்களுக்கு இலசமாக வழங்கப்படும் உதவிகள், உரோம் நகரில் 2017ம் ஆண்டிலிருந்து ஆற்றப்பட்டு வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் ஜெனோவா நகரில், ஏழைகள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்குமென இலவச வசதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பானவர் பிரசன்னத்தில் அக்டோபர் 25, இவ்வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

திருஅவை ஏழைகள் மீது காட்டுகின்ற பரிவன்பை வெளிப்படுத்தும் விதமாக, உரோம் ஜான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் பரிந்துரையின் பேரில், இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

"திருத்தந்தையின் சலவையகம்" என்ற பெயரில் ஏழைகளுக்கு, குறிப்பாக, தங்குவதற்கு இடமின்றி இருப்போர்க்கு இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்கள் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், Procter & Gamble அமைப்பு, Whirlpool கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இந்த உதவிகளைச் செய்துள்ளன.

வீடற்றவர்களுக்கு இலசமாக வழங்கப்படும் இத்தகைய உதவிகள், உரோம் நகரில் 2017ம் ஆண்டிலிருந்து ஆற்றப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2019, 15:43