தேடுதல்

Vatican News
ஜிம்பாப்வேயில் உலக உணவு நாள் ஜிம்பாப்வேயில் உலக உணவு நாள்  (ANSA)

பசியைப் போக்குவதில் குடும்பங்களின் பங்கு

நமக்குக் கொடுக்கப்படும் உணவை, அளவோடு, சுயக்கட்டுப்பாடுடன் மற்றும் ஒருமைப்பாடு உணர்வுடன் உட்கொள்ளும் வாழ்வுமுறையில் பழக வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகில் அனைவருக்கும் போதுமான உணவு இருக்கின்றபோதிலும், இப்பூமியின் வளங்கள் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படாமல் இருப்பதுவே, பெரும் பிரச்சனையாக உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அக்டோபர் 16, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட உலக உணவு நாளில், ஐ.நா. நிறுவனத்தின் FAO எனப்படும், உணவு மற்றும், வேளாண்மை அமைப்பு, “நலமான உணவு மற்றும், மனித மாண்பு” என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில், உரையாற்றிய, பேரருள்திரு பெர்னானேடோ கிகா அரெலானோ அவர்கள், இவ்வாறு கூறினார்.

உரோம் நகரிலுள்ள, FAO, IFAD மற்றும் PAM அமைப்புக்களில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றும் பேரருள்திரு அரெலானோ அவர்கள்,  உலகில் 82 கோடிக்கு அதிகமானோர் பசியால் வாடும்வேளை, உடல் எடை அதிகரிப்பு, சத்துணவு பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளும் நிலவுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

சத்துக்குறைவு, உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல், மனித மாண்பு பாதுகாக்கப்படுவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறிய பற்றியும் வலியுறுத்திய பேரருள்திரு அரெலானோ அவர்கள், பசியைப் போக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.

நமக்குக் கொடுக்கப்படும் உணவை, அளவோடு, சுயக்கட்டுப்பாடுடன் மற்றும் ஒருமைப்பாடு உணர்வுடன் உட்கொள்ளும் வாழ்வுமுறையை அமைத்துக் கொடுப்பதில்  குடும்பங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும், பேரருள்திரு அரெலானோ அவர்கள், FAO அமைப்பு நடத்திய கருத்தரங்கில் சுட்டிக்காட்டினார்.

18 October 2019, 15:33