தேடுதல்

திருப்பீட பல்சமய உரையாடல் அவை கருத்தரங்கில் ஆயர் Guixot,  திருப்பீடத்தின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் திருப்பீட பல்சமய உரையாடல் அவை கருத்தரங்கில் ஆயர் Guixot, திருப்பீடத்தின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் 

திருப்பீடத்தில் காந்திஜி பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவு

நம் அதிகாரத்திற்குட்பட்ட எல்லா வழிகளையும் பயன்படுத்தி, உலகை, அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்ததாக வடிவமைக்க, எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நல்லவராய் இரு மற்றும், நன்மை செய், தீமையை வெறுத்து, அமைதியை அறுவடை செய், அனைவரையும் அன்பு செய் மற்றும், ஒருவரையும் வெறுக்காதே, பன்மைத்தன்மையை மதித்து, உடன்பிறந்த உணர்வை ஊக்குவி என்னும், உலகளாவிய நன்னெறிகளையே ஒவ்வொரு மதமும், தனது விசுவாசிகளுக்குப் போதிக்கின்றது என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கூறினார்.

மகாத்மா காந்தி அவர்கள் பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவும், உலக வன்முறையற்ற நாளும், அக்டோபர் 2, இப்புதனன்று சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, அக்டோபர் 1, இச்செவ்வாயன்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, ஏற்பாடு செய்த ஒருநாள் கருத்தரங்கில், சொற்பொழிவாளர்கள், வல்லுனர்கள், அமைதியை ஊக்குவிப்பவர்கள், வன்முறையற்ற வழிகளை ஆதரிப்பவர்கள் மற்றும், பல்வேறு மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இவர்கள் எல்லாருக்கும் தனது நல்வாழ்த்தைத் தெரிவித்து, வரவேற்று உரையாற்றிய, கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், அமைதி, ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வது, மனித உடன்யிறந்தநிலை மற்றும், நல்லிணக்க வாழ்வின் மதிப்பு ஆகியவற்றைப் பாதுகாத்து, அதில் வேரூன்றியிருப்பதற்கு இக்கருத்தரங்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

அகிம்சை அல்லது வன்முறையற்ற நிலை என்பது, காந்திஜி அவர்களுக்கு, மாபெரும் அன்பு, மாபெரும் பிறரன்புச் செயலாகும் என்றும், வன்முறையற்ற நிலை, நோயுற்ற சமுதாயத்தைக் குணப்படுத்தும் மருந்தாகும், இன்னும், வெறுப்பு மற்றும் போர்களை முறிக்கும் மருந்தாகும் என்றும், ஆயர் Guixot அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2019, 15:57