தேடுதல்

Vatican News
ஈக்குவதோர் நாட்டிற்கும், குழந்தை இயேசு மருத்துவமனைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஈக்குவதோர் நாட்டிற்கும், குழந்தை இயேசு மருத்துவமனைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது 

ஈக்குவதோர், குழந்தை இயேசு மருத்துவமனை ஒப்பந்தம்

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவதோர் நாட்டில், உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனையும், ஈக்குவதோர் அரசின் குழந்தைகள் நலத்துறையும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகள் குறித்து, ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈக்குவதோர் நாட்டிற்கும், உரோம் நகரில் செயலாற்றும் குழந்தை இயேசு மருத்துவமனைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

ஈக்குவதோர் நாட்டு அரசுத்தலைவர் Lenín Moreno அவர்களின் மனைவி, முதன்மைப் பெண்மணி, Rocío González de Moreno அவர்களின் முன்னிலையில், இந்த ஒப்பந்தம், உரோம் நகரின் குழந்தை இயேசு மருத்துவமனையில் கையெழுத்திடப்பட்டது.

திருப்பீடத்தின் மேற்பார்வையில் இயங்கும் குழந்தை இயேசு மருத்துவமனையின் இயக்குனர் Mariella Enoc அவர்களால் வரவேற்கப்பட்ட முதன்மைப் பெண்மணி Moreno அவர்கள், மருத்துவமனையை சுற்றிவந்து பார்வையிட்டார்.

அங்கு மருத்துவ உதவிகள் பெற்றுவரும் குழந்தைகள் பாடல்கள் பாடியதோடு, அவர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள், முதன்மைப் பெண்மணி Moreno அவர்களுக்கு வழங்கப்பட்டன.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவதோர் நாட்டில், உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனையும், ஈக்குவதோர் அரசின் குழந்தைகள் நலத்துறையும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகள் குறித்து, ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

11 July 2019, 15:55