தேடுதல்

சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சியகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சியகம் 

கிறிஸ்தவத்திற்கும் சீன கலைப்பாரம்பரியத்திற்கும் இடையே சந்திப்பு

'அழகு நம்மை ஒன்றிணைக்கிறது. வத்திக்கான் அருங்காட்சியகங்களில் உள்ள சீன கலை வண்ணங்கள்' என்ற தலைப்பில் சீனாவில் கண்காட்சி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் அருங்காட்சியகங்களும், சீனாவின் பெய்ஜிங் அருங்காட்சியகமும் இணைந்து, பெய்ஜிங் அருங்காட்சியகத்தில், புதிய கண்காட்சி ஒன்றை, இச்செவ்வாயன்று திறக்க உள்ளன.

'அழகு நம்மை ஒன்றிணைக்கிறது. வத்திக்கான் அருங்காட்சியகங்களில் உள்ள சீன கலை வண்ணங்கள்' என்ற தலைப்பில் இடம்பெறும் இந்தக் கண்காட்சி, நாளை முதல், இவ்வாண்டு ஜூலை 14ம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும்.

வத்திக்கான் அருங்காட்சியகத்துக்கும்  சீனாவின் மிக முக்கியத் துறைக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளுடன் இத்தகைய கண்காட்சி ஒன்று திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும், இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றத்தைக் காண்பிப்பதாக உள்ளது எனவும் அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வத்திக்கான் அருங்காட்சியகங்களிலுள்ள, சீனா தொடர்புடைய புத்த, கத்தோலிக்க மற்றும் மத சார்பற்ற கலைப்படைப்புக்களுள் 76 படைப்புக்கள், பெய்ஜிங்கின் அரண்மனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும் எனவும், இவைகளுள் சீன கலைஞர்களின் படைப்புக்கள், கிறிஸ்தவத்திற்கும் சீன கலைப்பாரம்பரியத்திற்கும் இடையேயான சந்திப்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் எனவும் திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2019, 15:54